இந்த வருடம் உங்க சம்பளம் 10.8% வரை உயரும்.. என்ஜாய் பண்ணுங்க!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 2015ஆண்டில் குறைந்து வரும் பணவீக்கம், நிலையான பருவநிலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதால் இந்திய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்குச் சுமார் 10.8 சதவீதம் வரை சம்பள உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

 

கடந்த சில வருடங்களில் இதுவே அதிளவிலான ஊதிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாத சம்பளம் வாங்கும் பணியாளர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டும் நிலையில் உள்ளனர்.

டவர் வாட்சன்

டவர் வாட்சன்

சர்வதேச மனிதவள ஆலோசனை நிறுவனமான டவர் வாட்சன் ஆய்வுகளின் படி 2015ஆம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள் 10.8 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளக்க முடியும் எனக் கணித்துள்ளது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்தியாவை ஒப்பிடும்போது ஊதிய உயர்வு அளிப்பதில் சீனா பின்தங்கியுள்ளது.

டவர் வாட்சன் நிறுவன கணிப்புகளின் படி இந்தியா 10.8% இந்தோனேசியா 9.5%, சீனா 8.6%, பிலிப்பைன்ஸ் 6.7%, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் 4.5%, ஆஸ்திரேலியா 3.5%, ஜப்பான் 2.5% வரை உயர்வு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

உண்மையான நிலை என்ன..
 

உண்மையான நிலை என்ன..

10.8 சதவீத ஊதிய உயர்வு எனக் கூறும்போதே மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உண்மையாக நிறுவனத்தின் நிலை, செலவீணங்கள், உள்நாட்டு மற்றும் மத்திய,மாநில அரசு வரி போன்றவற்றுக்குப் பின் இந்திய நிறுவனங்கள் 3.3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை மட்டும் ஊதிய உயர்வு அளிக்கும்.

பொருளாதாரச் சூழ்நிலை...

பொருளாதாரச் சூழ்நிலை...

எண்ணெய் விலை சரிவு, பணவீக்கத்தில் மிதான சரிவு ஆகிய காரணத்தினால் இந்தியாவில் செலவீனங்கள் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதாரச் சிறந்த முறையில் வளர எதுவாக அமைந்துள்ளது.

எனவே தான் டவர் வாட்சன் நிறுவனம் இந்திய நிறுவனங்களால் 10.8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க முடியும் என நம்பப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த ஆய்வில் 19 நாடுகளில் இருந்து 20,000 நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

2015 சூப்பர்...

2015 சூப்பர்...

2013ஆம் ஆண்டில் கணிப்புகளின் படி 10.3%ஆக இருந்தபோது பணவீக்கம் 10 சதவீதமாக இருந்து இதனால் பணியாளர்களுக்கு 0.3% சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்து.

தற்போது இதன் நிலை வேறு, கணிப்புகள் 10.8%, பணவீக்கம் 5.8% எனவே 5 சதவீதம் வரை உயர்வு கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You may get 10.8% pay hike this year

The salary increase for employees in 2015 will perhaps be one of the best rewarding in recent years, owing to moderating inflation rates and a favourable economic climate, indicates a survey.
Story first published: Friday, June 19, 2015, 14:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X