2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடித்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடித்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூன் 30 கடைசித் தேதி அறிவிக்கப்பட நிலையில் சில நாட்களில் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளுக்கு மக்கள் விரைந்தனர். இந்நிலையை அறிந்த ஆர்பிஐ காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

 

இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடித்த ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி, மக்களைத் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி வைப்புகளிலோ அல்லது வங்கிகளில் மாற்றிக்கொள்ளவோ கேட்டுக்கொண்டது. இதற்காகக் காலக்கெடுவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது பின்பு அதனை நீட்டித்து ஜூன் 30ஆக அறிவித்தது.

எப்படிக் கண்டுப்பிடிப்பது??

எப்படிக் கண்டுப்பிடிப்பது??

2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பின்புறம் அச்சடிக்கப்பட்ட வருடம் பதிவு செய்யப்பட்டு இருக்காது, ஆகவே மக்கள் அதனை எளிதாகக் கண்டுப்பிடிக்க முடியும்.

ஏன் இந்த நிலை..

ஏன் இந்த நிலை..

2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதால், அதனைப் புழக்கத்தில் இருந்து குறைக்கவும், அகற்றவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

இதன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

164 கோடி நோட்டுகள்

164 கோடி நோட்டுகள்

இந்த அறிவிப்பை ஏற்று மக்கள் கடந்த 13 மாதங்களில் சுமார் 164 கோடி ரூபாய் நோட்டுகளை மண்டல ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் சமர்ப்பித்துள்ளதாக ரிச்ர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜனவரி 1
 

ஜனவரி 1

இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி முன்பு ஜனவரி 1ஆம் தேதியை காலக்கெடுவாக அறிவித்தது, பின் அதனை ஜூன் 30 வரையில் நிடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Only 10 days left to exchange your pre-2005 currency notes

Only 10 days are left to exchange pre-2005 currency notes, including those of Rs 500 and Rs 1,000 denominations, at banks as the deadline to do so is ending on June 30.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X