அமெரிக்க சட்டதிட்டத்தை கடைபிடிக்காமல் ஊழியர்களை ஏமாற்றும் 'விப்ரோ'..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: அமெரிக்காவில் செயல்படும் இந்திய மென்பொருள் நிறுவனமான விப்ரோ, தனது ஊழியர்களுக்கு அதிக நேரம் (ஒவர்டைம்) பணியாற்றியற்கான சம்பளத்தை அளிக்காமல் ஏமாற்றி வருவதாக இந்நிறுவனப் பணியாளர் வழக்கு தொடுத்துள்ளார்.

 

விப்ரோ நிறுவனத்தின் கலிபோர்னியா கிளையில் உயர் பதிவில் இருக்கும் சூரி பாயலா இந்நிறுவனத்திற்கு எதிராகக் கிலாஸ் ஆக்ஷன் வழக்கைத் தொடுத்துள்ளார்.

இடமாற்றம்

இடமாற்றம்

இவ்வழக்கை தற்காலிகமாக முடக்கவும், நிறுவனத்தின் நற்பெயரை காப்பாற்றவும் விப்ரோ நிறுவனம் சூரி பாயலா அவர்களை அதிரடியாக அமெரிக்க கிளையில் இருந்து விட்டு வெளியேற்றி பெங்களூரு அலுவலகத்தில் பணியில் அமர்த்தியுள்ளது.

இதனால் சூரி பாயலா வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கிலாஸ் ஆக்ஷன் வழக்கு

கிலாஸ் ஆக்ஷன் வழக்கு

இவ்வழக்கின் படி, தனக்கும் மட்டும் அல்லாமல் தன்னுடன் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு இதேபோன்ற நிலை தான் நிலவுகிறது எனச் சூரி பாயலா குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இது கலிபோர்னியா சட்டத்திற்கும் புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

40 மணிநேரம்
 

40 மணிநேரம்

வாரத்திற்கு 40 மணிநேர பணி என்பதே கலிபோர்னியா சட்டத்தில் உள்ளது.

ஆனால் விப்ரோ நிறுவனத்தின் செயல்முறைகள் முழுமையாக நிறுவனத்திற்குச் சாதகமாக உள்ளது. பணியாளர்களின் ஒவர்டைம் பணிகளுக்கு எவ்விதமான சம்பளம் அளிப்பதில்லை என விப்ரோ நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எல்-1பி விசா

எல்-1பி விசா

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எல்-1பி விசா மூலம் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் பலருக்குக் கலிபோர்னியா சட்டத்தைப் பற்றித் தெரிவதில்லை.

இதனைப் பயன்படுத்தி நிறுவனம் அதிகளவிலான லாபத்தைப் பெறுகிறது எனச் சூரி தனது குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டார்.

விப்ரோ பதில்

விப்ரோ பதில்

இதுகுறித்து விப்ரோ கூறுகையில், நிறுவன சட்டத்திட்டங்கள் படி கம்பியூட்டர் சப்போர்ட், டிரபுல்சூடிங், டெஸ்டிங் போன்ற பணிகளுக்கு ஒவர்டைம்-கான சம்பளம் கிடையாது எனத் தெரிவித்தது.

இதற்கு எதிராகக் கலிபோர்னியா நிதிமன்றம், பணியாளர்கள் வருடத்திற்கு 84,130 டாலருக்கு குறைவாகச் சம்பளம் வாங்குவதால் அவர்களுக்கு ஒவர்டைம்-கான சம்பளத்தை அளிக்க முடியாது எனக் கூறுவது தவறு எனத் தெரிவித்துள்ளது.

சூரி பாயலா

சூரி பாயலா

இவரை அமெரிக்க DirecTV நிறுவனத்தில் இருந்து கணினி தொழில்நுட்ப வல்லுனர் பிரிவில் Architect ஆகப் பணியில் விப்ரோ நியமித்தது.

கடந்த 6 மாதமாகத் தனக்கு ஒவர்டைம், போக்குவரத்துப் போன்றவற்றுக்கான சம்பளத்தை விப்ரோ அளிக்கவில்லை, அயினும் தான் மாதத்திற்கு 7,000 டாலர் என்ற குறைவான சம்பளத்தை மட்டுமே பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

விப்ரோ

விப்ரோ

இதுகுறித்து விப்ரோ நிறுவனம் எவ்விதமான பதில்களையும் அளிக்க வருப்பம் தெரிவிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro transfers litigant Suri Payala to Bengaluru

In a class action lawsuit filed with the Superior Court of California, County of Los Angeles, Indian national Suri Payala is claiming Wipro Ltd. failed to compensate him and other employees for numerous overtime hours logged.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X