ஸ்டீவ் ஜாப்ஸின் நிலை இவருக்கும் வந்தது.. பாவம் ராகுல் யாதவ்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் இணையதளம் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் யாதவ் அவர்களை இந்நிறுவனத்தின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து விலக்குவதாக ஹவுசிங்.காம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

டிஜிட்டல் உலகின் புரட்சியாளர் எனப் போற்றப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கும் அதே போன்ற நிலைதான் சந்தித்தார்.

தான் உருவாக்கிய நிறுவனத்திலேயே இருந்து அவர் வெளியேற்றப்பட்டார், இதன் பின் நிறுவனத்தைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் அவரை ஆப்பிள் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஹவுசிங்.காம் நிர்வாகம்

ஹவுசிங்.காம் நிர்வாகம்

முதலீட்டாளர்கள், மீடியா மற்றும் வர்த்தகத்தில் அவரது செயல்பாடு நிறுவனத்திற்கு எதிராகவும், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் ராகுல் யாதவ் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படுகிறார். இனி அவருக்கும் ஹவுசிங்.காம் நிறுவனத்திற்கு எந்தவிதமான சம்மந்தம் இல்லை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஐடி பாம்பே

ஐஐடி பாம்பே

26 வயதாகும் ராகுல் யாதவ் ஐஐடி பாம்பே கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஹவுசிங்.காம் நிறுவனம் ராகுல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து 2012ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

இதன் பின் மக்கள் மத்தியிலும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்நிறுவனம் பிரபலம் அடைந்து மிகுந்த நம்பிக்கை அளித்தது.

887 கோடி
 

887 கோடி

கடந்த 3 வருடத்தில் இந்நிறுவனம் சுமார் 139.5 பில்லியன் டாலர், ஆதாவது 887 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.

இந்நிறுவனத்தில் ஜப்பான் சாப்ட் பாங்க்,ஹீலியான் வென்சர் பார்ட்னர்ஸ், குவால்கம் பார்னர்ஸ் மற்றும் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் துவக்க காலத்திலேயே துவங்கியது.

சண்டை

சண்டை

2015ஆம் ஆண்டுத் துவக்கத்தில் சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர் சைலேந்திர சிங்-கிடம் சண்டையிட்டதன் மூலம் ராகுல் செய்திகளில் இடம்பெற்றார்.

பணியாளர்களுக்கு 200 கோடி ரூபாய்

பணியாளர்களுக்கு 200 கோடி ரூபாய்

இதன் பின் சமீபத்தில் தனது 200 கோடி ரூபாய் சொத்துக்களையும் நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் இவர் கண் சிமிட்டும் நேரத்தில் பிரபலம் ஆனார்.

நெருக்கடி

நெருக்கடி

ராகுல் யாதவின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் நிறுவத்திற்கு முதலீட்டாளர்கள் வாயிலாகவும், வர்த்தக ரீதியில் பல பிரச்சனைகளை ஹவுசிங் .காம் சந்தித்தது. இதன் காரணமாகவே யாதவ் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

 இடைக்காலச் சீஇஓ

இடைக்காலச் சீஇஓ

ராகுல் யாதவ் வெளியேற்றத்தைக் குறித்து ஹவுசிங்.காம் நிறுவனம் கூறுகையில் இடைக்காலச் சீஇஓ நியமனம் செய்வதில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது தினசரி நிறுவன நடவடிக்கைகளில் நிர்வாகக் குழு மற்றும் ஆப்ரேஷன் குழுவும் முழுமையாகச் செயல்படத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Housing.com sacks CEO Rahul Yadav

Housing.com's chief executive Rahul Yadav has been terminated by the online real estate listing portal, after three years of co-founding the company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X