160 கிமீ வேக ரயில்கள்... ரூ.2,500 கோடி ரயில்வே திட்டத்திற்கு 25 நிறுவனங்கள் போட்டி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைக் கைப்பற்ற 25 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம்.

 

இத்துறை அறிவிக்கப்பட்டுள்ள படி இந்திய ரயில்வே துறைக்கு 315 எலக்ட்ரிக் ரயில் பெட்டிகளை அல்லது 15 முழு ரயில்களைக் கொள்முதல், உற்பத்தி மற்றும் மேலாண்மை ஆகிய பணிகளுக்கான மொத்த திட்டத்தை அறிவித்தது. மேலும் இத்திட்டத்தைப் பெற உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

160கிலோ மீட்டர் வேகம்

160கிலோ மீட்டர் வேகம்

இப்புதிய ரயில் பெட்டிகளின் மூலம் ராஜ்தானி மற்றும் சதபதி எக்ஸ்பிரஸ் ரயில்களை 160 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் அளவிற்கு மேம்படுத்தப்பட உள்ளது.

ரயில்வே பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட்

இந்திய ரயில்வே துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இத்திட்டம், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தாக்கல் செய்தார். இதன் பின்னர் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

23 நிறுவனங்கள்

23 நிறுவனங்கள்

2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே துறையின் இத்திட்டத்திற்கு உலக நாடுகளில் இருந்து 23 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக ரியல்வே துறை தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்
 

இந்திய நிறுவனங்கள்

இத்திட்டத்தைப் பெற பன்னாட்டு நிறுவனங்கள் ஒருபுறம் போட்டி போட்டாலும், பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், தனியார் நிறுவமான டிடகார் வேகன்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களும் விண்ணப்பம் அளித்துப் போட்டியில் இறங்கியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இத்திட்டத்திற்கு உலகின் முன்னணி நிறுவனங்களான ஹூண்டாய் ரோடெம், டிரான்ஸ்மாஷ் ஹோல்டிங், மாஸ்கோவ், டேங்லோ, அல்ஸ்டாம், ஹிட்டாசி, தோஷிமா, பாம்ஏர்டியர், சீமென்ஸ், சிஎஸ்ஆர் குவிங்டாவ் மற்றும் சிஎஸ்ஆர் ஜூஜோவ் ஆகிய அனைத்தும் விண்ணப்பம் அளித்துள்ளது.

இறக்குமதி மற்றும் உற்பத்தி

இறக்குமதி மற்றும் உற்பத்தி

15 ரயில்களை உற்பத்தி செய்யும் இத்திட்டத்தைக் கைபெற்றும் நிறுவனம் 2 ரயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும். மீதமுள்ள அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

பராமரிப்பு

பராமரிப்பு

மேலும் வெற்றிபெறும் நிறுவனம் இந்த 15 ரயில்களை அடுத்த 7 வருடங்களுக்குப் பராமரிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இந்த ரயில்களின் காலம் 35 வருடம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

23 firms show interest in train set project

The Railways’ Rs.2,500-crore train set project under Prime Minister Narendra Modi’s ‘Make in India’ programme has seen interest from global firms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X