'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு தயாரானது 'சோனி'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான சோனி, இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாக்ஸ்கான் நிறுவனத்தின் துணையோடு புதிய தொழிற்சாலையில் தனது உற்பத்தியைத் துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

 

சோனி

சோனி

இந்தியாவில் இரண்டு முறை உற்பத்தி துவங்குவதற்காக முயற்சி செய்தும் தோல்லியுற்ற நிலையில், சோனி நிறுவனம் 2004ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இறக்குமதி செய்து இந்நிறுவன உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

மத்திய அரசு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு அளித்துள்ள சலுகையைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளச் சோனி திட்டமிட்டுள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனம்

பாக்ஸ்கான் நிறுவனம்

இதன் படி அதானி கூட்டணியில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் அமைக்க உள்ள நான்கு தொழிற்சாலையில் சோனி தனது உற்பத்தியைத் துவங்க உள்ளது.

சோனி
 

சோனி

தற்போது உள்ள வர்த்தக நிலையில் இந்தியாவில் சொந்த உற்பத்தி தளத்தை அமைக்க இயலாத நிலையில் உள்ளோம், ஆனால் அடுத்தச் சில வருடங்களின் சோனி நிறுவனத்தின் தனி உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட முடிவுகள்

இறுதிக்கட்ட முடிவுகள்

இந்தியாவில் உற்பத்தி துவங்குவது குறித்து இறுதிக்கட்ட முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், உற்பத்தி துவங்கும் திட்டத்தில் முழுமையாக இறங்கியுள்ளோம் எனச் சோனி நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் கெனிச்சிரோ ஹிபி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sony to 'Make in India' via Foxconn

Japanese electronics giant Sony is all set to make in India, though the products will be contract-manufactured at Taiwanese maker Foxconn's upcoming facilities in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X