ரஷ்ய துணையுடன் இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல் மேம்பாடு, பராமரிப்பு தளம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்டர்ஸ்பெர்க்: நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்தல், பராமரிப்பு மற்றும் கோளாறுகளைச் சரிபார்க்கும் சர்வதேச தளமாக இந்தியாவை உருவாக்க ரஷ்யா நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த மிகப்பெரிய திட்டத்தை இந்திய நிறுவனத்தின் துணையுடன் துவங்க ரஷ்ய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது. இது இந்தியாவிற்குப் பல ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் ஒரு ஜாக்பாட்.

பல ஆயிரம் கோடி..

பல ஆயிரம் கோடி..

ரஷ்ய துணையோடு இந்தியாவில் அமைய இருக்கும் இத்திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

முதல்கட்டமாக இப்புதிய துறைமுகத்தில் ரஷ்ய டீசல் எஞ்சின நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் இந்திய கப்பல்களைப் பழுதுபார்க்கப்படும். இதன் பின் உலக நாடுகளின் மையமாக மாறும்.

 

இந்திய தளம்

இந்திய தளம்

இதன் மூலம் இந்தியா நீர்மூழ்கி கப்பல்களைக் கையாளுவதில் திறன்பட விளங்கும். மேலும் அடுத்தச் சில வருடங்களில் இந்தியா எளிதாகத் தனது உயர்தர நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பைத் திட்டத்தைத் துவங்கும்.

அதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் தனது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய இது சிறந்த வாய்ப்பாகும்.

 

ரஷ்ய நிறுவனம்

ரஷ்ய நிறுவனம்

ரஷ்ய நாட்டு நிறுவனமான Zvyozdochka shipyard இதுகுறித்துக் கூறுகையில், இத்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை இந்திய நிறுவனத்துடன் நடந்து வருகிறது.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அடுத்த மாதத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

அனில் அம்பானி

அனில் அம்பானி

இந்திய நிறுவன பெயரை வெளியிடாத Zvyozdochka shipyard, பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் அது அனில் அம்பானி சமீபத்தில் கைபற்றிய பிப்பாவ் ஷிப்யார்டு நிறுவனம் எனத் தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் மாத்தில் இதற்கான ஒப்புந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திடப்படும்.

 

மோடி

மோடி

தற்போது பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia wants to make India a global hub for submarine upgrade, maintenance and repair

Russia says that it wants to make India a global hub for the upgrade, maintenance and repair of conventional submarines and its leading shipyard is in final talks to select an Indian joint venture partner for a mega project to set up facilities here.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X