'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் இறங்க தயாராகும் 'விப்ரோ'.. டென்மார்க் நிறுவனத்தைக் கைப்பற்றியது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டிசைன்இட் என்னும் வடிவமைப்பு நிறுவனத்தை 85 மில்லியன் யூரோ, ஆதாவது 595 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனத்தை விப்ரோவின் கிளை நிறுவனமான விப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விப்ரோ டிஜிட்டல்

விப்ரோ டிஜிட்டல்

டிசைன்இட் நிறுவனம் பொருட்கள் மற்றும் சேவை வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்நிறுவனத்தை விப்ரோவுடன் இணைப்பதன் மூலம் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருட்களின் வடிவமைப்பில் மாற்றம் உண்டாகும் என விப்ரோ டிஜிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 3 வருடம்

3 வருடம்

இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதற்கான 595 கோடி ரூபாய் தொகையை, விப்ரோ அடுத்த 3 வருடத்தில் அளிப்பதாக டிசைன்இட் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா


மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இறங்க, விப்ரோ நிறுவனமும் இணைந்திட தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டிஜிட்டல் பிரிவில் விப்ரோ வலிமை அடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா துவக்க விழாவில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

29 சதவீத வருவாய்

29 சதவீத வருவாய்

விப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் சமீபத்தில் உருவானது, மேலும் இந்நிறுவனம் பிஸ்னஸ் அப்ளிகேஷன் சர்வீஸ் பிரிவில் உள்ளது.

இப்பிரிவின் 29 சதவீத வருவாய் விப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து கிடைக்கிறது.

 

டிசைன்இட்

டிசைன்இட்

இந்நிறுவனம் 1991ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டுத் தற்போது உலக நாடுகளில் இந்நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 27 மில்லியன் யூரோ.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

விப்ரோ நிறுவனத்தின் பங்கு வர்த்தக நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro to buy Designit for Rs.595 crore

Wipro on Thursday said it would acquire Denmark-based design firm Designit for a purchase consideration of €85 million (about Rs.595 crore).
Story first published: Friday, July 10, 2015, 11:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X