டெல்லி: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்தை குறைக்க பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவான பிரிக்ஸ் வங்கி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக இவ்வங்கி தலைவரான கே.வி. காமத் கூறினார்.
நியூ டெலப்மென்ட் வங்கி
பிரிக்ஸ் நாடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட இவ்வங்கிக்கு நியூ டெலப்மென்ட் வங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வங்கி சீனா ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது.
7வது மாநாடு
பிரிக்ஸ் நாடுகளின் 7வது மாநாடு ரஷ்யாவில் கடந்த விழாக்கிழமை முடிவடைந்தது. இதில் நியூ டெலப்மென்ட் வங்கியின் பெயர் மற்றும் 4 தலைவர்களையும், ஐந்து நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கே.வி. காமத்
இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவின் முன்னணி வங்கியாளரான கே.வி. காமத் அவர்கள் கடந்த மாதம் மத்திய அரசு நியமித்தது.
முதல் கடன்
பிரிக்ஸ் வங்கி தனது முதல் கடன் தொகையை 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளதாக காமத் ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் காமத் தெரிவித்தார்.
ரஷ்யா ஒப்புதல்
வங்கி செயல்பாட்டை தொடங்குவதில் இருந்து சில முக்கிய பிரச்சினைகள் ஜூலை 7ஆம் தேதி களைந்த நிலையில் வங்கி செயல்பாட்டைத் துவங்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications