மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோவ்: இந்திய பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் திட்டமாக மத்திய அரசு, ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 200 சாப்பர் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

அடி சக்க.. முதல நீர்மூழ்கி கப்பல், இப்போ ராணுவ ஹெலிகாப்டர்களா. கலக்குகிறது இந்தியா.

ரஷ்யா - இந்தியா

ரஷ்யா - இந்தியா

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்தியா- ரஷ்யா நாடுகள் இடையே ராணுவம் மற்றும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என ரஷ்ய நாட்டிற்கான இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் தெரிவித்தார்.

200 ஹெலிகாப்டர்கள்

200 ஹெலிகாப்டர்கள்

இப்புதிய திட்டத்தின் படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும். இதனால் மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படும் தொகை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

ரஷ்ய நாட்டுடன் செய்யப்பட்டு இந்த ஒப்பந்தம் மோடியின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.

தொழில்நுட்ப உதவி
 

தொழில்நுட்ப உதவி

இந்நிலையில் இந்திய நிறுவனம் ஒன்று, ரஷ்ய நிறுவன துணையோடு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்ப உதவியை ரஷ்யா இந்தியாவிற்கு அளிக்க உள்ளது.

பி.எஸ்.ராகவன்

பி.எஸ்.ராகவன்

ராணுவ ஒத்துழைப்பில் இந்திய - ரஷ்யா நாடுகள் இடையே சுமுகமான உறவு இல்லை எனக் கருத்து நிலவி வருகிறது, இது முற்றிலும் தவறான ஒன்று எனப் பி.எஸ்.ராகவன் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளுக்கு மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியா

இந்தியா

மேலும் அவர் இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்கள் பிற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், 70 சதவீத ஆயுதங்களை ரஷ்யாவில் இருந்துதான் இந்தியா பெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Make in India: India, Russia to jointly build 200 military choppers

In a move aimed at boosting India's defence sector, 200 helicopters will be manufactured in the country with Russian collaboration as part of intensification and diversification of their strategic ties.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X