காலவதியான ஆயுள் காப்பீட்டை புதுப்பிப்பது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான ஆயுள் காப்பீட்டு திட்ட கணக்கை ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தொடர முடியாமல் போனவர்கள் ஏராளம். இதற்குப் பல காரணங்கள் உண்டு

 

சில பேர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பார்கள், சில பேர் பிரீமியம் செலுத்த இயலாமல் போயிருக்கும், மேலும் பலர் வரி சலுகைகளுக்காக நிறைய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொண்டு, இப்பொது பிரீமியம் கட்ட முடியாமல் நிறுத்தி இருப்பார்கள்.

இதை மேலோட்டமாகப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் உண்மை - பெரும்பாலானவர்களின் பாலிசிகள் காலாவதியாகி விட்டது என்பது தான். அதிலும், சில பேர் தங்களுடை பாலிசியை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமலிருப்பார்கள்.

ரொம்ப முக்கியம்..

ரொம்ப முக்கியம்..

எனினும், நீங்கள் பிரீமியமாகப் பணம் செலுத்தியிருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள் மற்றும் ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

2 வழிகள் உள்ளது

2 வழிகள் உள்ளது

இரண்டு வழிமுறைகளில் உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகலாம். நீங்கள் பிரீமியம் தொகையை நிறைய மாதங்களுக்குச் செலுத்தாமல் இருப்பது மற்றும் பணத்தைத் திருப்பியளிக்கும் மதிப்பீடு மூலமாகப் பணத்தை எடுத்து விடுவது ஆகியவையாகும்.

காப்பீட்டுத் தொகை
 

காப்பீட்டுத் தொகை

உங்களுடைய கணக்கை நீங்கள் முடிக்கும் போது, நீங்கள் செலுத்திய தவணை தொகையைத் தான் வட்டி மற்றும் போன்ஸ் தொகையுடன் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும்.

ஒட்டு மொத்த ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான தொகையையும் அது முடிவுறும் காலத்திற்கு முன்னதாகக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

காலாவதியான காப்பீட்டுத் திட்டம்

காலாவதியான காப்பீட்டுத் திட்டம்

இப்பொழுது நாம் தொடங்கிய தலைப்பிற்கு வருவோமா? காலாவதியான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

அது பாலிசியின் கால அளவைப் பொறுத்ததாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விபரமாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

 

சாதாரணமாகப் புதுப்பித்தல்

சாதாரணமாகப் புதுப்பித்தல்

நீங்கள் கடந்த 6 மாதங்களாக அல்லது அதற்கு மேலான மாதங்கள் பிரீமியம் செலுத்தாமலிருந்தால், அந்தத் தொகையைச் செலுத்தி புதுப்பிக்க முடியும்.

இதற்கான வட்டி விகிதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், மீண்டும் ஆரோக்கியப் பரிசோதனை செய்வதைப் பற்றி இங்கே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

 

மருத்துவப் பரிசோதனைகள்

மருத்துவப் பரிசோதனைகள்

நீண்ட காலத்திற்குப் பின்னர்ப் பாலிசியைப் புதுப்பிக்க முன் வரும் போது, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உங்களை மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்கலாம். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

தற்கொலை

தற்கொலை

மேலும், தற்கொலை பற்றிய ஒப்புதல் புதியதொரு ஒப்பந்தம் மூலம் அடுத்த ஒரு ஆண்டுக்குப் பொருந்தும் வகையில் உறுதி செய்யப்படும். அதாவது, புதிதாகப் பாலிசி எடுத்துக் கொண்ட, அந்த ஒரு ஆண்டுக் காலத்திற்குள் தற்கொலை செய்து கொண்டால், பணம் கொடுக்கப்பட மாட்டாது.

விசாரணை

விசாரணை

புதிதாகப் பாலிசி எடுத்துக் கொண்ட 2 ஆண்டுகளுக்குள் நீங்கள் இறந்து விட்டால், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மிகவும் விபரமான விசாரணைகளையும் நடத்தும்.

நிறைவாக...

நிறைவாக...

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீங்கள் சொல்ல வேண்டிய உடல் நலக்குறைவு ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லி விடுங்கள்.

மேலும், முந்தைய பாலிசி காலாவதியானதற்கான காரணத்தையும் சொல்லுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு ஒளிவு மறைவின்றி, உண்மையாக இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுடைய நியமனதாரர் பிரச்சனையின்றிப் பலனடைவார்.

 

அப்படியா? சொல்லவே இல்லை...

அப்படியா? சொல்லவே இல்லை...

அமெரிக்கா, சீனாவிற்கு பிறகு இந்தியா தான்.. 15 வருடம் காத்திருங்கள்!அமெரிக்கா, சீனாவிற்கு பிறகு இந்தியா தான்.. 15 வருடம் காத்திருங்கள்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Revive A Lapsed Life Insurance Policy?

There are many individuals who let their life insurance policy lapse for one reason or the other.
Story first published: Wednesday, July 22, 2015, 10:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X