வெளுத்து வாங்கும் டெக் மஹிந்திரா.. ஓரம்கட்டப்பட்ட இன்போசிஸ், டிசிஎஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய தகவல் தொழில்நுட்ப சந்தையில் அமையாக நிலையான வளர்ச்சியைப் பெற்று வரும் டெக் மஹிந்தியா 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 90 சதவீத லாப உயர்வை பதிவு செய்துள்ளது.

 

இத்துறை முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் லாப அளவீடுகளை நிலைநாட்டப் போராடும் நிலையில், டெக் மஹிந்திரா சத்தம் போடாமல் சாதித்துவிட்டது.

90 சதவீத உயர்வு

90 சதவீத உயர்வு

ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த லாப அளவு சுமார் 90.40 சதவீதம் வரை உயர்ந்து 816.84 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் வாயடைத்துப்போனது.

வருவாய்

வருவாய்

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 2.9 சதவீதம் அதிகரித்து 6293.8 கோடி ரூபாயாக உள்ளது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

ஜூன் 30ஆம் தேதி முடிவில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 770 ஆக உள்ளது.

பணியாளர் எண்ணிக்கை
 

பணியாளர் எண்ணிக்கை

ஜூன் மாத முடிவில் இந்நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 103,673 ஆக உள்ளது. இந்த 3 மாத காலகட்டத்தில் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் புதிதாக 392 பணியாளர்கள் இணைந்துள்ளனர்.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் டாலர் வருவாயைக் கணக்கிடும் போது இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.5 சதவீதம் அதிகரித்து 989 மில்லியன் டாலராக உள்ளது. டாலர் கணக்கீட்டில் லாப அளவு 40.5 சதவீதம் அதிகரித்து 106 மில்லியன் டாலராக உள்ளது.

வரிக்குப் பின் லாபம்

வரிக்குப் பின் லாபம்

முதல் காலாண்டில் வரி உட்பட அனைத்துச் செலவீணத்திற்குப் பின் இந்நிறுவனத்தின் லாப அளவு 43 சதவீதம் உயர்ந்து 676 கோடி ரூபாயாக உள்ளது.

இன்போசிஸ் டிசிஎஸ் முடிவுகள்

இன்போசிஸ் டிசிஎஸ் முடிவுகள்

ரூ.25,700 கோடி வருவாயுடன் டிசிஎஸ் நிறுவனம்.. லாபத்தில் 3.3% சரிவு!

3 மாதத்தில் 3,030 கோடி ரூபாய் லாபம்: 10% உயர்வுடன் சந்தையைக் கலக்கும் இன்போசிஸ்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra profit raised to 90 percent

Software solutions provider Tech Mahindra surpassed street expectations on bottomline & operational front Monday while revenue met estimates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X