பெங்களுரூ: உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் மளிகை பொருட்கள் அதாவது பலசரக்குப் பொருட்களை உள்ளூர் கடைகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கொண்டு சேர்க்கும் 'கிரானா நவ்' திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இந்நிறுவனத்திற்குப் போட்டியாகப் பிளிப்கார்ட் நிறுவனமும் இதே போன்ற சேவையைத் துவங்க திட்டமிட்டுள்ளது.
'f Qck'
இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கும் அமேசான் நிறுவனத்தின் கிரானா நவ் திட்டத்திற்குப் போட்டியாக 'எப் கூவிக்' என்னும் புதிய சேவையைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் இச்சேவையில் இரு நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி துவங்க உள்ளது.
ரோடுரன்னர் நிறுவனம்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி, உள்ளூர் கடைகளின் மூலம் (Location based delivery) வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களைச் சில மணிநேரத்திற்குள் கொண்டு சேர்க்க, சரக்கு விநியோக சேவை அளிக்கும் ரோடுரன்னர் நிறுவனத்துடன் பிளிப்கார்ட் இணைந்துள்ளது.
பார்சல்
மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ரோடுரன்னர் மட்டும் அல்லாமல் பார்சல் மற்றும் டெலிவரி சேவை அளிக்கும் சில நிறுவனங்களுடன் பேச்சுவர்த்தை நடத்தி வருகிறது.
பின்னி பன்சால்
இதுகுறித்து இந்நிறுவனத் தலைவர் மற்றும் இணை நிறுவனரான பின்னி பன்சால் கூறுகையில், தற்போதைய நிலையில் இப்புதிய திட்டத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம், மேற்படி விபரங்களைக் கூடிய விரைவில் அளிக்கிறோம் எனத் தெரிவித்தார்.
(வலது புறம் இருப்பது பின்னி பன்சால்)
உள்ளூர் கடைகள்
இப்புதிய சேவைகளின் மூலம் உள்ளூர் கடைகளுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், புதிய வர்த்தக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது.
அமேசான் நிறுவனம்
இந்நிறுவனம் தனது கிரானா நவ் சேவையைக் கடந்த ஏப்ரல் மாதம் மாம் அண்ட் பூப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா சில முக்கியப் பகுதிகளில் மட்டும் துவங்கியது.
ஆன்லைன் மளிகை கடை
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications