பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியது ஈபிஎப்ஓ அமைப்பு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஓய்வூதிய அமைப்பான ஈபிஎஃப்ஓ மத்திய அரசின் அனுமதியின் மூலம் வியாழக்கிழமை (இன்று) முதல் பங்குகச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.

இவ்வமைப்பு கடந்த 4 மாதங்களாகப் பங்குச்சந்தை முதலீட்டுக்கான பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதில், அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஈபிஎஃப்ஓ இன்று (0.6-08-2015) முதல் தனது முதலீட்டைத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக இவ்வமைப்பு எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஈடிஎப் மூலம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியது ஈபிஎப்ஓ அமைப்பு!

அதுக்குறித்தி மத்திய சேமநல நிதியமைப்பின் தலைவர் கே.கே.ஜலன் கூறுகையில், மத்திய அரசு அனுமதித்த 5 சதவீத தொகையை என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்ஈ சந்தைகளில் தலா ஒரு திட்டத்தில் முதலீட்டுச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

2015ஆம் நிதியாண்டு முடிவில், ஈபிஎஃப்ஓ அமைப்பு, பங்குச்சந்தையில் ஈடிஎப் மூலம் 5,000 கோடி முதல் 6,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது எனக் கூறினார்.

இதன் மூலம் இந்திய சந்தையில் ஈடிஎப் துறையின் முதலீட்டு அளவு 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது.

தற்போதைய நிலையில் ஈபிஎஃப்ஓ அமைப்பு பங்குச்சந்தை ஈடிஎப்-களில் மட்டுமே முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. தங்க ஈடிஎப்களில் முதலீடு செய்வது குறித்து எந்த முடிவுகளும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO to invest in equities from Thursday

Retirement fund manager Employees Provident Fund Organisation (EPFO) will enter the stock market through exchange-traded funds (ETFs) on Thursday, four months after it decided to invest in equities.
Story first published: Thursday, August 6, 2015, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X