ஸ்டீல் மீதான இறக்குமதி கட்டணம் 2.5% உயர்வு: மத்திய அரசு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீன பொருளாதாரம் தொடர் சரிவு பாதையில் உள்ளதால், இந்நாட்டு அரசு மற்றும் சென்டரல் வங்கி இணைந்து தனது நாணய மதிப்பை செவ்வாய்க்கிழமை 1.9 சதவீதம் வரை குறைத்தது.

இதன் எதிரொலியாகச் சீனாவில் இருந்து அதிகளவில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 2.5 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரித்ததுள்ளது.

ஸ்டீல் மீதான இறக்குமதி கட்டணம் 2.5% உயர்வு: மத்திய அரசு

இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் ஸ்டீல் இறக்குமதி குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

இந்தியாவில் விலை நிலை அதிகமாக உள்ளதால் இந்திய நிறுவனங்கள் ஸ்டீல் உலோகத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளான சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.

ஸ்டீல் மீதான இறக்குமதி கட்டணம் 2.5% உயர்வு: மத்திய அரசு

இதனைத் தடுக்க மத்திய அரசு வரி உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்தாலும், தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தது.

இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களான JSPL மற்றும் JSW ஆகியவை முதலாம் காலாண்டில் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்ததால், பொதுத்துறை வங்கிகளிடம் இந்நிறுவனங்கள் வாங்கிய கடன்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இருபக்கமும் சாதகமான நிலையில் குறைவான அளவிலேயே இறக்குமதி கட்டணத்தை உயர்ந்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt increases import duty on steel

A day after devaluation of the Chinese yuan, the government on Wednesday announced a 2.5% increase in customs duty on flat and long steel products.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X