250 விமானங்களை மொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.. அதிர்ச்சியில் இதர விமான நிறுவனங்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்க ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ விமானங்களை வாங்கத் திட்டமிட்டு இதற்கான ஆர்டரை சமர்ப்பித்துள்ளது.

இந்த 250 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை கையெழுத்திட்டது.

530 விமானங்கள்

530 விமானங்கள்

இதுவரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 530 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு 100 ஏ320 ரக விமானங்களும், 2011ஆம் ஆண்டு 180 விமானங்களும், தற்போது 250 ஏ320நியோ விமானங்களை ஆர்ட்ர் செய்து அசத்தியுள்ளது.

சாதனை

சாதனை

மேலும் இந்த ஆர்டர் தான் உலக விமானப் போக்குவரத்து துறையிலேயே, எண்ணிக்கையில் மிகப்பெரிய ஆர்டராகக் கருதப்படுகிறது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்கான முக்கியப் பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்த 26 பில்லியன் டாலர் ஒப்பந்தம், இந்நிறுவன மதிப்பை உயர்த்த உறுதுணையாக இருக்கும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்களைச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

250 விமானங்கள்

250 விமானங்கள்

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வங்குவதற்கான ஒப்பந்தத்தை 2014ஆம் ஆண்டே இருநிறுவனங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

இண்டிகோ நிறுவனத்தின் தள்ளுபடி விலைகள், குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் குறைவான மேம்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவை இந்நிறுவனத்தின் தொடர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

குறைந்த மேம்பாட்டுக் கட்டணம்

குறைந்த மேம்பாட்டுக் கட்டணம்

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுக் கட்டணங்கள் முக்கியச் சான்றாகும். இந்திய சந்தையின் பிற விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில் இண்டிகோ நிறுவனம் மிகவும் குறைவான மேம்பாட்டுக் கட்டணத்தை வசூல் செய்கிறது.

2014ஆம் நிதியாண்டில் ஒரு சீட்டுக்கு இண்டிகோ நிறுவனம் 0.18 டாலரை மட்டுமே வசூல் செய்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியா 0.34 டாலர், கோ ஏர் 0.35 டாலர், ஸ்பைஸ்ஜெட் 0.90 டாலர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் 0.95 டாலரை வசூல் செய்கிறது.

ஏர்பஸ் நிறுவனம்

ஏர்பஸ் நிறுவனம்

இந்நிறுவனம் இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்தைத் தவிர்த்து 196 விமானங்களை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, விஸ்தாரா, கோ ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றுள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiGo finalizes $26.55 billion purchase of 250 new A320 Neo jets

IndiGo, the country's biggest airline by market share has placed a firm order for 250 Airbus A320neo (new engine option) planes, the plane maker's biggest order by volume.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X