பெப்சி நிறுவனத்தில் 5 உயர் அதிகாரிகள் திடீர் ராஜினாமா.. வேலைப் பளு அதிகரித்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி குளிர்பான தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பெப்சி கோ நிறுவனத்தின் இந்திய கிளையில், திட்ட வடிவத்தில் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் மூலம் வேலை பளு அதிகரித்த காரணத்தால் இந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

 

இந்நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி இன்று (புதன்கிழமை) 5 உயர் அதிகாரிகள் பெப்சி நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

என்ன காரணம்..

என்ன காரணம்..

பெப்சி நிறுவனம் இந்திய சந்தையில் போட்டி எதிர்கொள்வதற்காவும், அதிக வர்த்தகத்தைப் பெறுவதற்காகவும் தனது குளிர்பானம் (beverages) மற்றும் தின்பண்டங்கள் (snacks) வர்த்தகத்தை இணைத்துள்ளது. இதனைப் பெப்சி நிறுவனம் பவர் ஆஃப் ஓன் என அழைக்கிறது.

பவர் ஆஃப் ஓன்

பவர் ஆஃப் ஓன்

இந்திய வர்த்தகத்தில் செய்யப்பட்ட புதிய பவர் ஆஃப் ஓன் மாற்றத்தின் மூலம் உயர் அதிகாரிகளின் வேலைப் பளு தாறுமாறாக அதிகரித்து, தங்களால் ஈடுகொடுக்க முடியாத நிலையில் முக்கியப் பிரிவுகளின் தலைவர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

ஜூலை 4
 

ஜூலை 4

சில நாட்களுக்கு முன் (ஜூலை 4) பெப்சி நிறுவனத்தின் இந்திய கிளையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாக இயக்குநரான டிஎஸ் முரளி, திட்டமிடல் மற்றும் உத்தி பிரிவின் உயர் தலைவர் மேக்நாந் மித்ரா மற்றும் பெருநிறுவன விவகார தலைவர் சுனில் ஆகியோர் வேலைப் பளு அதிகரிப்பால் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

இது புதிய கதை..

இது புதிய கதை..

இந்நிலையில் இன்று குளிர்பானம் (ருசித்ரா ஜேட்லி, வித்ரூ வியாசா), தின்பண்டங்கள் பிரிவின் (ராஜிவ் மாத்ராணி) மார்கெட்டிங் தலைவர்கள் மற்றும், பொது நிதியியல் (பல்லவ் படானி), மனிதவள பிரிவின் (கின்ஜால் சவுத்ரி) தலைவர்கள் ஆகிய 5 பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

டாப்பா டான்ஸ்

டாப்பா டான்ஸ்

பெப்சி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பலரும் ஏர்டெல் (ராஜிவ் மாத்ராணி) , கெல்லாக்ஸ் (பல்லவ் படானி), அமேசான் (கின்ஜால் சவுத்ரி) , ஹைக் (Hike, வித்ரூ வியாசா) போன்ற முன்னணி நிறுவனங்களில் இணைந்துள்ள நிலையில் பெப்சி நிறுவனம் நிர்வாகத் தலைவர்கள் இல்லாமல் டாப்பா டான்ஸ் ஆடத் துவங்கியுள்ளது.

கோகோ கோலா மற்றும் பிற நிறுவனங்கள்

கோகோ கோலா மற்றும் பிற நிறுவனங்கள்

பெப்சி நிறுவனம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் கோகோ கோலா மற்றும் பிற நிறுவனங்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Attrition on at PepsiCo India, 5 senior execs quit

At least five senior executives of PepsiCo India have resigned from the company, joining a stream of colleagues who have left the MNC' s local arm following a change in corporate strategy.
Story first published: Wednesday, August 19, 2015, 13:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X