வெற்றிகரமாக முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, திலீப் சங்வி அவர்களைப் பின்னுக்குத் தள்ளி 18.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

 

இந்திய பார்மா துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சன் பார்மா-வின் நிறுவனர் மற்றும் தலைவரான திலீப் சங்வி பல வருடங்களாக முதல் இடத்தைத் தக்கவைத்திருந்த முகேஷ் அம்பானி அவர்களைச் சில மாதங்களுக்கு முன் 2ஆம் இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.

ப்ளும்பெர்க் நிறுவனம்

ப்ளும்பெர்க் நிறுவனம்

அமெரிக்கச் செய்தி நிறுவனமான ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முகேஷ் அம்பானி அவர்கள் 18.20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், 17.80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2ஆம் இடத்திலும் உள்ளனர்.

3வது இடம்...

3வது இடம்...

கட்டுமான துறையில் இந்தியாவில் தலைசிறந்தவர்கள் பலர் இருந்தாலும் அதில் முதன்மையானவர் பலோன்ஜி மிஸ்திரி மந்தமான வர்த்தக வளர்ச்சியின் காரணமாக 1 சதவீத சரிவுடன் 14.60 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார்.

அசிம் பிரேம்ஜி
 

அசிம் பிரேம்ஜி

இவர் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, இப்பட்டியலில் 14.40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.

மேலும் இவர் 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களைத் தனது சொந்த அறக்கட்டளையின் மூலம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ்நாடார் இப்பட்டியலில் 12.80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.

லக்ஷ்மி மிட்டல்

லக்ஷ்மி மிட்டல்

எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லக்ஷ்மி மிட்டல், 12.10 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.

சைரஸ் பூனாவாலா

சைரஸ் பூனாவாலா

தடுப்புமருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ள சைரஸ் பூனாவாலா 8.50 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.

கெளதம் அதானி

கெளதம் அதானி

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கெளதம் அதானி 6.70 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார்.

கடந்த 10 வருடத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி அசாதாரமானது, குறிப்பாக மின் உற்பத்தி, துறைமுகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய துறைகளில் அவர் அதிகப்படியான வளர்ச்சியைச் சந்தித்துள்ளார்.

மிக்கி ஜகதினானி

மிக்கி ஜகதினானி

இப்பட்டியலில் லேண்டுமார்க் ரிடைல் நிறுவனத்தின் தலைவர் மிக்கி ஜகதினானி 6.40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உதய் கோட்டாக்

உதய் கோட்டாக்

நாட்டின் 5 வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோட்டாக் 6.40 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார்.

தேஷ் பந்து குப்தா

தேஷ் பந்து குப்தா

இந்திய பார்மா சந்தையில் முன்னணி நிறுவனமான திகழும் லுபின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேஷ் பந்து குப்தா இப்பட்டியலில் 5.90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கே.எம்.பிர்லா

கே.எம்.பிர்லா

ரிலையன்ஸ் குழுமத்தை போலப் பல துறைகளில் சிறந்து விளங்கும் ஆதித்தியா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்களம் பிர்லா, 5.30 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani dethrones Dilip Shanghvi as world's richest Indian

RIL chairman Mukesh Ambani has regained his position as the world's richest Indian with a net worth of $18.2 billion, as pharma tycoon Dilip Shanghvi slipped to the second place after remaining on top for the last few months, according to Bloomberg data.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X