வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்.. அட உண்மையாகத் தான்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய மக்களிடையே ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்துள்ள நிலையில், சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வெங்காயத்தைப் பாதி விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

 

இன்றைய நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வெறும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

லேக்கல்பனாயா, மேராகிராசர், பிரஷ்பல்சாபிஸ்.காம் மற்றும் கிராசர்மேக்ஸ் போன்ற பல ஆன்லைன் மளிகைக் கடை நிறுவனங்கள் இடைத்தரகர்கள் தலையீட்டு இல்லாமல், சிறப்பான விநியோக முறையைக் கொண்டு உள்ளதால் ஒரு கிலோ வெங்காயத்தை வெறும் 40 ரூபாய் முதல் 69 ரூபாய் விலையில் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

8 வருடங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் சந்தை விலையை விடவும் குறைவான விலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கத் துவங்கியது. இதனை எதிர்த்து மாயவதி தலைமையிலான உத்திரபிரதேச அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மூடப்பட்டது.

லேக்கல்பனாயா

லேக்கல்பனாயா

வெங்காயத்தின் விற்பனையைக் குறித்து லேக்கல்பனாயா நிறுவனத்தின் தலைவர் கரன் மெக்ரோத்ரா கூறுகையில், சில திட்டமுறைகள் மற்றும் கொள்முதல் மூலம் சந்தையில் குறைவான விலையில் வெங்காயத்தை விற்க முடிகிறது எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் மளிகைக் கடை
 

ஆன்லைன் மளிகைக் கடை

இன்றைய காலகட்டத்தில் பெரு நகரங்களில் ஆன்லைன் மளிகைக் கடைகளின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இச்சந்தையில் உள்ள பெரு நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் ஆகியவை ஏற்கனவே இத்தகைய சேவையைத் துவங்கினாலும், முழுமையாகவும் திறன் உடையதாகவும் விளங்கவில்லை.

இதனால் சிறுநிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், கைப்பற்றவும் தயாராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Want to buy onions cheap? Go online

online grocery stores are looking to gain favour with customers by offering onions at about half the rate that neighbourhood stores are charging.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X