ஈகாமர்ஸ் விற்பனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கனவு, ஒரு லட்சியம்.. வாழ்வில் வெற்றிப் பெறவேண்டும் என்ற இனம்புரியாத வெறி கொண்டவர்களுக்குத் தங்களின் இலக்கை அடைய வேகமான மற்றும் எளிமையான வழிகள் கிடைத்துவிட்டால், போராட்டம் பாதியாகக் குறைந்து விடும். என்ன நான் சொல்வது சரிதானே..

 

இத்தகைய வழிகளைக் கண்டு வெற்றிபெற்ற 8 இந்தியர்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். இன்றைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், ஈகாமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தி இவர்கள் வாழ்விலும், வியாபாரத்திலும் வெற்றிபெற்றுள்ளார்கள், ஆனால் இவர்களுக்கு வெற்றி எளிமையாகக் கிடைத்துவிடவில்லை. வாருங்கள் இவர்களது வெற்றிக்கான ரகசியத்தைத் தெரிந்துகொள்வோம்.

ஈகாமர்ஸ் விற்பனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்!

ஆர்த்திக் கோயல்

தன்னம்பிக்கை மற்றும் பெரியதாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக ஆர்த்திக் கோயல் இருந்தார். இவர் பல்வேறு வாடிக்கையாளர்களை அனுவதில் திறனுடையவர். இதனால் ஆர்த்தித் தனக்குக் குடும்பம் மற்றும் வீட்டைப் பேணுவது மட்டும் அல்லாமல் வர்த்தக உலகில் வெற்றி பெறும் அளவிற்குத் திறமையும், எண்ணமும் இருந்ததை உணர்ந்தார்.

இதனால் தான், டெல்லி சாந்தினி சவுக் தெருக்களில் இருந்த இவர் வர்த்தகம் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து மிகவும் லாபகரமானதாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வீட்டுப்பெண்களுக்கும் தூண்டுதலாக இருக்கும் அவரது வெற்றிக்கான மந்திரம் "உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு உங்களைத் தவிர எவருக்கும் ஆடிப்பணிய வேண்டாம்" என்பது தான்.

தனது முடிவுகளுக்குப் பின் ஒருபோதும் ஒட்டத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை, இதன் விளைவாகத் தற்போது சமுகத்தில் ஆர்த்திக் கோயல் அவர்களை ஒரு அடையாளமாகக் காணப்படுகிறார்.

ஆர்த்திக் கோயலின் வெற்றி

இவர் தற்போது குஷன், கப் மற்றும் லேப்டாப் ஸ்கின் போன்றவற்றைப் பிரத்தியகமாக வடிவமைக்கும் ஒரு வடிவமைப்பு நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். இவர் தனது பொருட்களை ஸ்னாப்டீல் போன்ற பல ஆன்லைன் விற்பனை முனையங்களின் மூலம் தினமும் 800 பொருட்கள் வரை விற்பனை செய்து வருகிறார்.

 

கவ்ரவ் கோயல்

கொல்கத்தாவில் பல கிளைகளுடன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கவ்ரவ் கோயல், தனது விற்பனை மற்றும் வர்த்தகத்தை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு சென்றார். இதனால் தற்போது புதிய அளவிலான வருவாய் மற்றும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளார். இவர் ஆன்லைன் விற்பனை தளத்தைப் பற்றி முன்கூடிய புரிதல் இல்லாமலேயே தனது வர்த்தகத்தைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் ஆலோசகர்களின் உதவியுடன் தனது வர்த்தகத்தை எளிமையாக இணைய வழி விற்பனைக்குக் கொண்டு சென்றார். தற்போது இதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவ்ரவ் கோயல் வெற்றி

இணைய வழி விற்பனை பற்றி முழுமையான புரிதல் இல்லாமல் ஸ்னாப்டீல் நிறுவன உதவியுடன் தனது வர்த்தகத்தை 100 சதவீதம் வரை கவ்ரவ் கோயல் உயர்த்தியுள்ளார்.

பாலாஜி

பரம்பரை புடவை உற்பத்தியாளர் குடும்பத்தில் இருந்து வந்த பாலாஜி தகவல் தொழில்நுட்ப பணியாளராக இருந்தாலும், தனது விற்பனையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இணைய வழி விற்பனையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு ஸ்னாப்டீல் சிறந்த தேர்வாக இவர்களுக்கு அமைந்துள்ளது.

எனவே பாலாஜி சிறந்த தனது தயாரிப்பில் உருவான புடவைகளைச் சிறந்த புகைப்படக்காரர்கள் கொண்டு புகைப்படம் எடுத்து ஸ்னாப்டீல் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். பார்க்கும்போதே பெண்களை வசிகரிக்கும் அளவிற்கு இவர்களது தயாரிப்பு மற்றும் டிசைன்கள் உள்ளதால் பாலாஜி அவர்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியது. தனது வெற்றிக்குப் புடவையின் டிசைன், தரம், புகைப்படங்கள் உதவினாலம் ஸ்னாப்டீல் ஆலோசகர்கள் அதிகளவில் உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலாஜியின் வெற்றி

இணைய வழி விற்பனையை அதிகரிக்கத் தற்போது தனிக் குழுவையே பாலாஜி நியமித்துள்ளார், இதனால் இவர் கடந்த சில மாதங்களில் தனது வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 3 மாதத்திற்கு ஒரு முறை பாலாஜி பழைய தயாரிப்புகளை நீக்கிவிட்டு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறார்.

தர்ஷன் ராஜ்பாரா

சந்தையில் போட்டியை எதிர்கொள்ள, தர்ஷன் விற்பனை பொருட்களின் புதுமை மற்றும் தனித்தன்மையை அதிகளவில் நம்பினார். பள்ளிப் படிப்பை கூட மூடிக்காத தர்ஷன் தாமாகவே ஆட்டோகேட் பயின்று புதிய டிசைன்களைத் தனக்கென உருவாக்கினார். ஸ்னாப்டீல் இவரது திறமைக்கு வாடிக்கையாளர்கள் கருத்துகளைக் கொண்டு சிறப்பான ரேடிங் அளிப்பதால் இவரது பொருட்களுக்குச் சந்தையில் தனி இடம் கிடைத்துள்ளது.

தர்ஷன் ராஜ்பாராவின் வெற்றி

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இணைந்த பின் இவரது வர்த்தகம் 2 மடங்கு அதிகரித்தது. மேலும் இவர் ஒருபோதும் பணப் பரிவர்த்தனையில் தாமதத்தைச் சந்தித்தில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் தர்ஷன் ராஜ்பாரா 3 மாதத்தில் 15 பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார். மேலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரவிதி லக்ஹோதியா

ஈகாமர்ஸ் தளத்தில் வர்த்தகம் அதிகரிக்கத் துவங்கிய சில காலத்திலேயே விற்பனையாளர்களிடம் மூலதனத்திற்குப் போதிய பணம் இல்லாமல் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்படும். இதில் பிரவிதி வித்தியாசமானவர். தனது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்னாப்டீலஸ் கேப்பிடல் அசிஸ்ட் பிரோகிராம் மூலம் தனது விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளார். தன்னைப் போன்ற பிற விற்பனையாளர்களுக்கு இவர் கூறுவது, "எதற்கும் ஒரு முடிவு கிடையாது" என்பது தான்.

பிரவிதி லக்ஹோதியாவின் வெற்றி

2012ஆம் ஆண்டு ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இணைந்த பிரவிதி, தனது வர்த்தகம் ஒவ்வொரு வருடமு் நிலையான வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தனது விற்பனை அளவுகளுக்கு ஏற்றவாறு பொருள்கள் மற்றும் அதன் விலை அளவுகளைப் பல வகைகளில் அளித்தார். இது இவரின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வி.எஸ் சந்திர குமார்

இவர் எப்போதும் தனது வர்த்தக அளவை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம் மற்றும் வழிகளைக் கண்டறியும் வேலையில் இருப்பதாகக் கூறினார். இணையவழி விற்பனையில் வெற்றி பெற, வாடிக்கையாளர்கள் மனநிலை (அவர்கள் விரும்பும் பொருட்கள்) பற்றி முழுமையான புரிதல் இருந்தாலே போதும் எனத் தெரிவித்தார்.

இதனால் தனது விற்பனைக் அதிகரிக்க இவர் தொடர்ந்து 10 புதிய பொருட்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும் அவர் கூறுகையில், "வாடிக்கையாளர் மனநிலையை அறிவது மிகவும் கடினமாக இருந்தாலும், இதனை வெற்றிகரமான செய்விட்டால் சந்தையில் நீங்கள் தான் ஸ்டார்" எனக் கூறுகிறார்.

வி.எஸ் சந்திர குமாரின் வெற்றி

இணையத்தில் தனது விற்பனை அதிகரிக்கத் துவங்கிய உடன் சந்திர 32 பேர் கொண்ட தனிக் குழுவை அமைத்து தனது இணைய வழி வர்த்தகத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார். மேலும் தனது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ளப் பிரத்தியேக மென்பொருளையும் வடிவமைத்துள்ளார். அதனுடன் தனது போட்டியாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பொருட்களை அளிப்பதன் மூலம் விற்பனை சந்தையில் தனித்துவம் காட்டி வருகிறார்.

ராமானுஜ சாரி

தன்னைப் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு ராமானுஜா சாரி அறிவுறுத்துவது ஒன்று தான் 'கஸ்டமர் ஈஸ் கிங்'. மேலும் இவர் சரியான விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்தால் கண்டிப்பாக வெற்றிப்பெறுவிடலாம் எனவும் கூறுகிறார்.

தனது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை இணையத்தில் சூட்டுப்பிடிக்கத் துவங்கிய உடன் அதிகளவிலான பொருட்களை வாங்கி விற்கத் துவங்கினார். இதன் மூலம் தனது பிராண்டுகள் எண்ணிக்கை 5இல் இருந்து 8ஆக உயர்ந்துள்ளது.

ராமானுஜா சாரியின் வெற்றி

இணைய வழி விற்பனை துவங்கிய ஒரு வருடத்தில் இவரது வர்த்தகம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது இவர் புதிய பிராண்ட பொருட்களில் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறார். ஸ்னாப்டீல் விற்பனை தளத்தில் இவரது விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இவரது விற்பனை மற்றும் விநியோகத்திற்கு ஏதுவாக ஸ்னாப்டீல் நிறுவனம் தனது கிடங்குகளில் பிரத்தியேகமான இடத்தை அளித்துள்ளது.

தொழில்துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனத்தில் பதித்துவிட்ட அன்ஷு அகர்வால் தனக்கான நேரத்திற்காகக் காத்திருந்தார், இவர் அஜ்மீரை சேர்ந்தவர். மேலும் இவர் தனது தயாரிப்பில் எப்போதும் தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் தனது விற்பனையை ஸ்னாப்டீல் நிறுவனத்தில் துவங்கிய ஒரு நாளிலேயே கற்பனை செய்ய முடியாத விற்பனை இலக்கை அடைந்தார். இது இவருக்குப் புதிய வேகத்தைக் கொடுத்தது தனது வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தவும் வழிவகுத்தது.

அன்ஷு அகர்வாலின் வெற்றி

2013ஆம் ஆண்டில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இணைந்த அன்ஷு அகர்வால் 100க்கும் மேற்பட்ட டிசைன்களை இந்நிறுவனத்தின் விற்பனை தளத்தில் வைத்துள்ளார். தற்போது இவரது விற்பனை அளவுகளைக் கண்டு ஸ்னாப்டீல் நிறுவனம் இவருக்குத் தனது கிடங்குகளில் தனி இடத்தை அளித்துள்ளது. மேலும் இவரது தயாரிப்புகளுக்கு ஸ்னாப்டீல் வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

Snapdeal Sale: Get 70% Off On Products across Site

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X