ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளம் ரூ.3,200 கோடியாக உயர்வு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் 250 பைலட் மற்றும் 800 விமானப் பணியாளர்களின் (Cabin Crew) சம்பளம் 3,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

கடந்த சில வருடங்களாகப் பணியாளர்களின் மொத்த சம்பள அளவுகள் செலவீண குறைப்பு நடவடிக்கையின் மூலம் தொடர்ந்து குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

100 கோடி ரூபாய் உயர்வு..

100 கோடி ரூபாய் உயர்வு..

நடப்பு நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளில் பணியாளர்களுக்குப் பதவி மற்றும் ஊதிய உயர்வு, பணியாளர்களின் கிராக்கிப்படு எனப்படும் dearness allowance அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா பணியாளர்களின் சம்பளத்திற்கான செலவீணம் கூடுதலாக ரூ.100 ரூபாய் அதிகரித்துள்ளது.

ரூ.3,200 கோடி

ரூ.3,200 கோடி

மார்ச் 31ஆம் தேதி முடிவில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிடி பணியாளர்களின் மொத்த சம்பள அளவுகள் 100 கோடி ரூபாய் அதிகரித்து ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

செலவீன குறைப்புகள்
 

செலவீன குறைப்புகள்

2011-12ஆம் நிதியாண்டில் இந்நிறுவன பணியாளர்களின் மொத்த சம்பள அளவுகள் 3,600 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பின் பல்வேறு செலவீண குறைப்புகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் இதன் அளவு 3,100 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் பல வருடங்களுக்குப் பின் ஏர் இந்தியா நிறுவனம் லாப நிலையை அடைந்தது.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 27,500, இதில் 20,500 பேர் நிரந்தர ஊழியர்கள் மற்றவர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.

விமானப் பணியாளர்கள்

விமானப் பணியாளர்கள்

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானச் சேவைகள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வருவதால் இந்நிறுவனத்தில் விமானப் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சனையைக் களைய ஏர் இந்தியா 800 புதிய விமானப் பணியாளர்களை நிறுவனத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் 450 பணியாளர்களை ஏற்கனவே இணைப்பட்டு உள்ளனர்.

பைலட்

பைலட்

இதேபோல் 30 பைலட்கள் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ள நிலையில் மேலும் 180 பைலட்களை நிறுவனத்தில் இணைக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 80 பைலட்களை நியமித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India wage bill to go up by Rs. 100 cr following fresh hiring

With Air India hiring additional 800 cabin crew and around 250 pilots, including commanders, its already bloated wage bill is expected to go up by Rs. 100 crore this fiscal after seeing a decline in the last few years.
Story first published: Monday, September 7, 2015, 9:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X