7வது சம்பள கமிஷன்: தெரிந்ததும்.. தெரியாததும்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசு தனது 7வது சம்பள கமிஷன் அறிக்கையை ஆய்வு செய்து வரும் நிலையில், இதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.

 

இன்றைய நிலையில் அரசு அதிகாரிகளிடம் சம்பள உயர்வு மற்றும் சம்பள கமிஷன் அல்லது அதனைப் பற்றிய கேள்விகள் ஏதேனும் கேட்டாலே முகத்தில் புன்னகை பூக்கிறது, காரணம் காசு, பணம், துட்டு, மணி, மணி..

(10 மாத தொடர் சரிவில் மொத்த விலை பணவீக்கம்!)(10 மாத தொடர் சரிவில் மொத்த விலை பணவீக்கம்!)

சரி, சம்பள கமிஷன் என்றால் என்ன?

சரி, சம்பள கமிஷன் என்றால் என்ன?

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சம்பள கமிஷன் குழு, ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியாதாரர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வுக் குறித்து ஒரு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

இதனைக் கொண்டு அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊதிய உயர்வை அறிவிக்கும்.

 

18 மாதங்கள்

18 மாதங்கள்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, 18 மாத ஆய்வுகளுக்குப் பின் சம்பள உயர்வு குறித்த ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். 7வது சம்பள கமிஷனுக்கான பணிகள் கடந்த பிப்ரவரி 2014ஆம் ஆண்டு நிதிபதி அசோ குமார் மத்தூர் தலைமையில் துவங்கப்பட்டது.

இக்குழு தனது பரிந்துரையை ஆகஸ்ட் 2015ஆம் மாதம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

 

சம்பள கமிஷன் அறிக்கை..
 

சம்பள கமிஷன் அறிக்கை..

இந்த அறிக்கையில், ஊதிய உயர்வு மட்டும் அல்லாமல் ஊதிய முறையும் குறிப்பிடப்படும். உதாரணமாக 6வது சம்பள கமிஷன் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் போக்குவரத்துக் கொடுப்பனவில் அதிகளவிலான தொகையும், கிராக்கிப்படியில் சில சதவீதம் கொடுக்கப்பட்டது.

ஆனால் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில், ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது, ஊழியர்களின் வேலைத் திறன் அடிப்படையிலான சம்பளம், பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் எனப் பலவற்றை இக்குழு இம்முறை பரிந்துரைத்துள்ளது.

 

ஜனவரி 1

ஜனவரி 1

மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் சம்பளம் உயர்வு மற்றும் சம்பள முறையை வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

7வது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசின் செலவீனம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். உதாரணமாக 6வது சம்பளம் கமிஷன் நாட்டில் அமலாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 2008-09ஆம் ஆண்டில் அரசு செலவீன அளவுகள் சுமார் 6 சதவீதம் வரை உயர்ந்தது.

தற்போதைய நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களின் சம்பள அளவுகள் நாட்டின் ஜிடிபியில் 1 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் 7 சம்பள கமிஷன் மூலம் அதன் அளவு 0.2-0.3 சதவீதம் வரை அதிகரிக்கும்.

 

இலக்குகள்

இலக்குகள்

மத்திய அரசின் செலவுகள் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பிற இலக்குகளை அடைய முடியாத நிலை ஏற்படும். இதனால் நாட்டின் மொத்த வளர்ச்சியில் கூடப் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஊழியர்கள்

ஊழியர்கள்

இந்த 7வது சம்பள கமிஷன் மூலம் இந்தியாவில் 48 லட்ச மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்ச ஓய்வுதியதாரர்கள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.

சம்பள கமிஷன் எதிரொலி...

சம்பள கமிஷன் எதிரொலி...

இந்தியாவில் ஓரே நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமானோரின் சம்பளம் உயர்ந்தால் நாட்டின் வர்த்தக அளவு கணிக்க முடியாத அளவிற்கு உயரும்.

2 கோடி ஊழியர்கள் என்று பார்க்காமல் 2 கோடி குடும்பங்கள் என்று பார்த்தால் நாட்டின் வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வேலைத்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வு..

வேலைத்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வு..

7வது சம்பள கமிஷன் திட்டத்தில் வேலைத்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வு என்னும் புதிய முறை அரசு ஊழியர்கள் மத்தியில் புதிய போட்டி மற்றும் வேகத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All you wanted to know about Seventh Pay Commission

Government offices are currently buzzing with excitement as employees await the recommendations of the Seventh Pay Commission.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X