இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: சீனாவின் முன்னணி செய்தி மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான ஹூரன், 4வது ஆண்டாக இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளதாக ஹூரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1,600 கோடி ரூபாய்

1,600 கோடி ரூபாய்

இந்நிறுவனத்தின் கணக்கீட்டு முறையில் 1,600 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ள இந்தியர்களை இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைக்கிறது.

இதன் படி 2015 ஜூலை மாதம் வரையிலான கணக்கீட்டின் படி இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் 76 பேர் அதிகம்.

 

76 புதுமுகங்கள்

76 புதுமுகங்கள்

ஹூரன் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்த வருடம் 76 பேர் புதிதாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாக் வங்கியின் தலைவரான உதய் கோட்டாக் இந்த வருடம் டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார். அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி அதிகளவிலான நன்கொடையின் மூலம் டாப் 5 இடங்களில் இருந்து முதல் முறையாகக் கீழே தள்ளப்பட்டு உள்ளார்.

 

குடும்பத் தொழில்..
 

குடும்பத் தொழில்..

மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள 85 சதவீதம் பேர் குடும்பத் தொழிலை நிர்வாகம் செய்து வருகின்றனர். சரி வாங்க இப்போ டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை பார்ப்போம்.

உலகளவில் வர்த்தகம் செய்யும் இந்திய குடும்பங்கள்!உலகளவில் வர்த்தகம் செய்யும் இந்திய குடும்பங்கள்!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 296 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் 160,950 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது. அடுத்தச் சில மாதங்களில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் இந்தியாவில் 4ஜி சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

திலிப் சங்வி

திலிப் சங்வி

இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலிப் சங்வி 126,290 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் கைப்பற்றுதலுக்குப் பின் இவரின் சொத்து மதிப்பில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் நிறுவன வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இவரின் சொத்து மதிப்பு 2 சதவீதம் வரை சரிந்துள்ளது.

 

எஸ்.பி ஹிந்துஜா மற்றும் குடும்பம்

எஸ்.பி ஹிந்துஜா மற்றும் குடும்பம்

ஹிந்துஜா சகோதரர்கள் இப்பட்டியலில் 43 சதவீத உயர்வுடன் 103,030 சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்கள் ஆட்டோமோட்டிவ், ரியல் எஸ்டேட், மற்றும் எண்ணெய் ஆகிய பல துறைகளில் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றனர்.

 

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ்நாடார் இப்பட்டியலில் 94,020 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட 2015ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 21 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

பலோன்ஜி மிஸ்திரி

பலோன்ஜி மிஸ்திரி

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கட்டுமானத்துறையில் சிறந்து விளங்கும் பலோன்ஜி மிஸ்திரி அவர்களின் வர்த்தகத்தின் மூலம் 87,290 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்புடன் இப்பிட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இவர் உள்ளார். மேலும் இவரது மகன் சைரஸ் மிஸ்திரி அவர்கள் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

 

லக்ஷ்மி மிட்டல்

லக்ஷ்மி மிட்டல்

எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லக்ஷ்மி மிட்டல் கடந்த மாதங்களாக மந்தமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை அடைத்து வருவதால் இவரது சொத்து மதிப்பு 21 சதவீதம் சரிந்து 83,400 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

இவர் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, அதிகளவிலான நன்கொடையின் மூலம் இவரது சொத்து மதிப்பு 39 சதவீதம் சரிந்து 51,900 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

கெளதம் அதானி

கெளதம் அதானி

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கெளதம் அதானி கடந்த சில வருடங்களாக வர்த்தக உலகில் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டின் ஜூலை மாத கணக்கீட்டின் படி இவரது சொத்து மதிப்பு 15 சதவீதம் அதிகரித்து 50,500 கோடி ரூபாயாக உள்ளது.

 

சுனில் மிட்டல் மற்றும் குடும்பம்

சுனில் மிட்டல் மற்றும் குடும்பம்

இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர் மற்றும் சிறப்பான தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் 2015ஆம் ஆண்டில் 48,540 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளார்.

உதய் கோட்டாக்

உதய் கோட்டாக்

நாட்டின் 5 வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோட்டாக் அவர்களின் சொத்து மதிப்பு 33 சதவீதம் உயர்ந்து 47,610 கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

சீனா மட்டும் அல்ல...

சீனா மட்டும் அல்ல...

உலகப் பொருளாதாரத்தை பாதிக்கப்போவது சீனாவின் வீழ்ச்சி மட்டுமல்ல, இன்னும்...!உலகப் பொருளாதாரத்தை பாதிக்கப்போவது சீனாவின் வீழ்ச்சி மட்டுமல்ல, இன்னும்...!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hurun India Rich List 2015

Hurun Report released the Hurun India Rich List, a list of the richest people in India with a cut-off of INR 1,600 Cr. This is the fourth year of the list, which has become a benchmark for the private sector and has become widely accepted to be the most robust attempt at covering entrepreneurship in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X