உயிலில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 7 முக்கியமான விவரங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம் அன்பிற்குரியவர்களுக்காகச் சொத்துக்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதற்கான உயிலைத் தயார் செய்து வைப்பது. இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த முக்கியமான ஒரு செயலை செய்வதில்லை.

 

ஒரு உயிலைப் பதிவு செய்வது உங்கள் சொத்துக்களை அது போய்ச் சேரவேண்டியவர்களுக்கு எந்தச் சிக்கலுமின்றிப் போய்ச்சேர உதவும்.

ஒரு உயிலை உருவாக்கும் முன்னர் உங்களுடைய சொத்துக்களின் விவரங்களைச் சேகரித்துப் பட்டியலிட்டுக் யார் யாருக்கு அதனை அளிப்பது என்பதனை தீர்மானித்துக் கொள்வது அவசியம்.

(உயில் எழுதப்போறீங்களா? அப்ப இதையெல்லாம் கவனமா பார்த்துக்கோங்க..)

உயிலில் இடம்பெறவேண்டிய ஏழு முக்கிய விவரங்கள் இதோ உங்களுக்காக:

1. அன்பளிப்பாகக் குத்தகை உரிமைகள் உயில் இடம் பெறலாம்.

2. சட்டபூர்வமாக உரிமை மாற்றம் செய்யப்பட்ட முன்னோர்களின் சொத்து யாருக்கு அளிக்கலாம் என்பதை உயிலில் பதிவு செய்யலாம்.

உயிலில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 7 முக்கியமான விவரங்கள்

3. ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவோ அல்லது பங்குதாரராகவோ உள்ள ஒருவர் அதனை உயிலின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தலாம். ஆனால் இந்த உயில் சில கூட்டுத் தொழில் ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

4. ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தில் பங்கினை உயில் மூலம் தெரியப்படுத்தலாம்

5. தனிநபர்கள் தங்கள் அயல்நாட்டிலுள்ள சொத்துக்களை அன்பளிப்பாக அளித்து உயிலில் குறிப்பிடலாம். எனினும் அவை அந்தந்த நாட்டிலுள்ள சட்டதிட்டங்களுக்குட்பட்டதாக இருக்கும்.

6. ஒருவர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளையும், ஓவியங்கள், கலைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், அறிவுசார் சொத்துக்கள், சமூக வலைத்தளக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட உபயோகப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கி உயிலில் குறிப்பிடலாம்.

கண்ணிற்குப் புலப்படும் மற்றும் புலப்படாத தனிநபர் சொத்துகள், வரவு நிலுவைகள் மற்றும் செலுத்த வேண்டிய கடன் உள்ளிட்ட பொறுப்புகளையும் உயிலில் சேர்க்கலாம்.

ரொக்கம், நகைகள், ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள், வாகனங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் மற்றும் நிலம், வீடு, கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் ஆகியவையும் உயிலில் சேர்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Things Which Must Be Included In A Will

Creating and registering a Will is more important than creating assets for the loved ones. In India, many tend to fail in taking this step.
Story first published: Saturday, September 19, 2015, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X