மோசமான சம்பளம் வழங்குவதில் 'இந்திய ஐடி நிறுவனங்கள்' முன்னிலை.. திடுக்கிடும் சர்வே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் புகுந்துள்ள நிலையில் இத்துறையின் வளர்ச்சியும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளது.

இந்நிலையில் உலகநாடுகளில் தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஒரு முக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மோசமான, அதாவது மிகக் குறைவான சம்பளம் வழங்கும் நாட்டுகள் பட்டியலில், இந்திய ஐடி நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்திய ஐடி ஊழியர்களின் சம்பளம்

இந்திய ஐடி ஊழியர்களின் சம்பளம்

இந்திய ஐடித்துறை ஊழியர்களின் சராசரி சம்பளத்தின் அளவு வருடத்திற்கு 41,213 டாலராக உள்ளது. இந்நிலையில் இந்தியர்களின் சம்பள நிலையை ஒப்பிடும் போது சுவிஸ் நாட்டில் இதன் அளவு சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வு முழுவதும் ஐடித்துறையின் நடுநிலை ஊழியர்களின் சம்பளத்தை மையமாக வைத்துக்கொண்டு நடத்தப்பட்டது.

 

MyHiringClub.com சர்வே 2015

MyHiringClub.com சர்வே 2015

இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வளர்ந்து வரும் ஆட்சேர்ப்பு நிறுவனமான MyHiringClub.com உலக ஐடி ஊழியர்களின் சம்பளம் 2015 என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் மிக மேசமான சம்பளத்தை வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவை விடவும் மோசமான நாடுகள் உள்ளது.. வாங்க அதையும் பார்ப்போம்...

 

பல்கேரியா

பல்கேரியா

இப்பட்டியலில் பல்கேரியா (25,680 டாலர்) முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதன் பின் வியட்நாம் (30,938 டாலர்), தாய்லாந்து (34,423 டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்று இந்தியாவை 7வது இடத்திற்குத் தள்ளியுள்ளது.

ராஜேஷ் குமார்

ராஜேஷ் குமார்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் அவுட்சேர்சிங் மற்றும் ஆப்ஷோர் நடவடிக்கைகளின் மூலமே உலக நாடுகளில் ஐடி ஊழியர்களின் சம்பளம் மாறுபடுகிறது என MyHiringClub.com மற்றும் FlikJobs.com நிறுவனங்களின் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

7 வது இடத்தில் இந்தியா..

7 வது இடத்தில் இந்தியா..


பல்கேரியா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளை அடுத்து இந்தோனேசியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் பின் பிலிப்பைன்ஸ் (37,534 டாலர்), இந்தியா (41,213 டாலர்), சீனா (42,689 டாலர்), செக் குடியரசு (43,219 டாலர்), மற்றும் அரஜென்டினா (51,380 டாலர்) ஆகியவை அடுத்தெடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

அதிகம் சம்பளம்

அதிகம் சம்பளம்

இந்நிலையில் அதிகச் சம்பளம் அளிக்கும் நாடுகளில் சுவிஸ் 1,71,465 டாலருடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் (1,52,430 டாலர்) 2வது இடத்திலும் உள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. இதன் பின் டென்மார்க், அமெரிக்கா, பிரட்டன் அடுத்தெடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

நிறுவனங்களுக்கு இந்தியா சொர்கம்..

நிறுவனங்களுக்கு இந்தியா சொர்கம்..

பன்னாட்டு ஐடி நிறுவனங்களுக்கு இந்திய சந்தை இன்றளவும் விரும்பத்தக்க நாடுகளாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் குறைவான செலவில் திறமையான பணியாளர்கள் கிடைப்பது தான்.ட

ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. எனவே ஐடி துறையில் பணியாற்றுவோர் கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டும்.

 

இவ்வளவு சம்பளமா..?

இவ்வளவு சம்பளமா..?

<strong><em>கிள்ளிக் கொடுக்கும் இடத்தில் அள்ளிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்..!</em></strong>கிள்ளிக் கொடுக்கும் இடத்தில் அள்ளிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT Companies Among World's Worst Paymasters: Report

Indian IT companies are among the 10 worst paymasters in the world, says a survey.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X