'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் புகழ்ந்து தள்ளும் டெக்னாலஜி டான்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் ஜோஸ்: அமெரிக்கா சிலிக்கான் வேலியில் உள்ள முக்கிய நிறுவனத் தலைவர்கள் மற்றும் வர்த்தகச் சந்தை வல்லுனர்களைச் சந்தித்த பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடும் வகையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பேஸ்புக் மார்க் ஜூக்கரபெர்க் முதல் கூகிள், மைக்ரோசாபட், ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி நிறுவன தலைவர்கள் இந்தியாவை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவன வரலாற்றில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்குகள் உண்டு. என்னைப் பொருத்த வரையில் இந்தியா, அறிவின் கோவில் என்றும் அழைப்பேன் என்று மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.

பேஸ்புக் நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது, நிறுவனம் மற்றும் அதன் செயல்முறையை மாற்றி அமைக்கும் பணியில் தூண்டுதலாக என் வாழ்வில் இந்தியா இருந்தது எனப் பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.

இதன் காரணமாகத் தான் பேஸ்புக் சந்தையில் 10 வருடமாகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

 

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மென்பொருள் துறையில் முடி சூடா மன்னாகத் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்ய நாடெல்லா கூறுகையில், இந்தியாவில் உலகதரம் வாய்ந்த வர்த்தகர்கள் மற்றும் மக்கள் தொகை உள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கும் ஒன்று.

பிரதமர் மோடி அவர்களுக்குத் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நாட்டின் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தனித் திறன் வாய்ந்தவர் என்றும் பிரதமரை புகழ்ந்து பாராட்டினார்.

 

டிஜிட்டல் இந்தியாவில் மைக்ரோசாப்ட்
 

டிஜிட்டல் இந்தியாவில் மைக்ரோசாப்ட்

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் சுமார் 5,00,000 கிராமங்களுக்குத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல உள்ளோம் என நாடெல்லா தெரிவித்தார்.

அதுமட்டும் அல்லாமல், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளோம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

 

நம்ம சுந்தர் பிச்சை..

நம்ம சுந்தர் பிச்சை..

தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கூகிள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை கூறுகையில் உலகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ளதையும், இதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதை அறியும்போது நான் மிகவும் உற்சாகம் அடைக்கிறேன் என்று தனது பேச்சைத் துவங்கினார் சுந்தர்.

அறிவு பசி

அறிவு பசி

உலகில் ஸ்டாப் நிறுவனங்கள் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. சுமார் 3,000 நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, இதில் உலகச் சந்தையைக் கலக்கும் மிகப்பெரிய கதைகளும் உண்டு. சிலிக்கான் வேலியில் நிலவும் இதே வெப்பம் இந்தியாவிலும் உள்ளது, இதற்கு முக்கியக் காரணம் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவு பசி என்று தனது உரையை முடித்தார்.

டிம் குக், ஆப்பிள்

டிம் குக், ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளர்கள் மனதிலும் இந்தியாவிற்குத் தனி இடம் உண்டு. எங்களது நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியாவில் இருந்து தான் புதிய உத்வேகத்தைப் பெற்றதாகப் பல முறை கூறியுள்ளார்.

பால் ஜேக்கப்ஸ்

பால் ஜேக்கப்ஸ்

Qualcomm நிறுவனத்தின் தலைவரான பால் ஜேக்கப்ஸ் கூறுகையில், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். குறிப்பாக உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மொபைல் மூலம் இண்டர்நெட் டிராப்பிக் மிகவும் அதிகம், இதேபோல் ஸ்மார்ட்போன் சந்தைக்கும் இந்தியா மிகப்பெரிய வாய்ப்பாக எங்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

சிஸ்கோ சிஸ்டம்ஸ்

சிஸ்கோ சிஸ்டம்ஸ்

இந்திய வளர்ச்சியில் பிரதமர் மோடி மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியவராக இருப்பார் என்று சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்தார்.

டாப் சீஇஓக்கள் உடன் சந்திப்பு,...

இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்காக மோடி அமெரிக்காவில் 41 நிறுவன சீஇஓக்களை நேரடியாக சந்தித்து பேசினார்.

18,500 அமெரிக்க வாழ் இந்தியர்கள்

இன்று காலை சான் ஜோஸ் பகுதியில் உள்ள SAP சென்டரில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் 18,500 அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

அமெரிக்க சுற்றுப் பணத்தில் பேஸ்புக் நிறுவன தலைவர் மார்த் ஜூக்கர்பெர்க் அவர்களின் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்தார் பிரதமர் மோடி.

பேஸ்புக் அலுவலகத்தில் மோடி...

இன்று காலையில் பேஸ்புக் நிறுவனத்தை சுற்றிப்பார்த்த மோடி பேஸ்புக் வால்-இல் தனது ஸ்டேடஸ் பதிவு செய்து பின்  மார்க் உடனான கேள்வி நேரத்தில் பங்குக்கொண்டார்.

கூகிள்

இதன் பின் தமிழன் தலைமை வகிக்கும் கூகிள் நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பத்தை சந்தர் பிச்சையுடன் பார்வையிட்டார் மோடி.

ஈலன் மஸ்க்

ஆட்டோமொபைல் நிறுவனம் முதல் வான்வெளி ஆராய்ச்சி முதல் கலக்கி வரும் ஈலன் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு, பேட்டரி கார்கள் குறித்து ஈலன் மஸ்க் உடன் தனது கேள்விகளை கேட்டார் மோடி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What top CEOs said about India after meeting PM Modi

PM Modi on Sunday met many stars and startups of Silicon Valley who signed on to PM Modi's 'Digital India' initiative, announcing a slew of initiatives. Let's take a look at what top 5 tech CEOs had to say.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X