அடுத்த 'பிக் பில்லியன் டே'-விற்குத் தயாரானது பிளிப்கார்ட்.. இம்முறை 'பிக் பில்லியன் சேல்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 'பிக் பில்லியன் டே' சலுகை விற்பனையின் மூலம் கடந்த வருடம் வாடிக்கையாளர்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு வந்த பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள், மீண்டும் 'பிக் பில்லியன் சேல்' என்னும் புதிய சலுகை விற்பனையை அறிவித்துள்ளனர்.

 

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வருகிற அக்டோபர் 13-17ஆம் தேதிகளில் அதிரடி சலுகைகளில் 70 பிரிவுகளில் 5 நாள் விற்பனையை அறிவித்துள்ளது.

சின்ன வித்தியாசம்..

சின்ன வித்தியாசம்..

பிளிப்கார்ட் அறிவித்துள்ள 'பிக் பல்லியன் சேல்' முற்றிலும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புகள் உள்ளது.

பிரிவுகள்

பிரிவுகள்

இந்த விற்பனையில் ஆடைகள், காலணிகள், மொபைல், ஃபர்னிசர், லேப்டாப், பொம்மைகள், நகைகள், வாட்ச் போன்ற 70 பிரிவுகளில் விற்பனை செய்யப் பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் விழாக்காலம் நெருங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் ஷாப்பிங் செய்வதற்கான அவசியம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வாய்ப்பை பிளிப்கார்ட் பயன்படுத்தியுள்ளது.

'பிக் பல்லியன் சேல்' விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான லாபத்தை அடைவார்கள் எனப் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேம்பாடு..
 

மேம்பாடு..

அக்டோபர் 13-17ஆம் தேதிகளில் வாடிக்கையாளர்களை வருகையைச் சமாளிக்கும் அளவிற்குத் தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் சப்ளை செயின் சேவையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகப் பிளிப்கார்ட் கூறுகிறது.

75 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர் தளம் கூடுதலாக 50 மில்லியன் வாடிக்கையாளர்களின் வருகை பதிவு செய்யும் அளவிற்குத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

இந்தப் பிரத்தியேக விற்பனையின் மூலம் பிளிப்கார்ட் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான விற்பனையைப் பெற திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart plans ‘Big Billion Sale'

After the failure of the much touted ‘Big Billion Day’ last year, e-commerce market place Flipkart is gearing up for its “Big Billion Sale” season two.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X