இன்டர்நெட் சேவை வழங்கும் உரிமத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கைப்பற்றியது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழக மக்களுக்கு இன்டர்நெட் மற்றும் பிராட்பேன்ட் சேவை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் உரிமத்தை வழங்கியுள்ளது.

 

இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் தமிழக அரசு சுமார் 7 கோடி ரூபாய் வர்த்தகத்தை பெறும் என கணக்கிடப்படுகிறது.

இன்டர்நெட் சேவை

இன்டர்நெட் சேவை

தமிழகச் சட்டசபையில் கடந்த செப்.14 தேதி 110 விதியின் கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக, கிராமங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் தொடர்பு ஏற்படுத்தும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனத்திற்கு ISP உரிமம் கிடைத்துள்ளது.

மலிவான கட்டணம்

மலிவான கட்டணம்

குறைந்த கட்டணத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் இன்டர்நெட் சேவை அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம் கூடிய விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

இது டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்...

அரசு கேபிள் டிவி
 

அரசு கேபிள் டிவி

TACTV நிறுவனம், உள்ளுர் கேபிள் ஆப்ரேட்டர்கள் துணையுடன் தமிழ்நாடு முழுவதும் இன்டர்நெட் மற்றும் பிராட்பேன்ட் சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசு கேபிள் டிவி ISP உரிமத்தை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளதாகத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கேபிள் ஆப்ரேட்டர்கள்

கேபிள் ஆப்ரேட்டர்கள்

மேலும் இச்சேவையை அளிக்க விரும்பும் உள்ளுர் கேபிள் ஆப்ரேட்டர்கள் TACTV நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனக் குமரகுருபரன் தெரிவித்தார்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom ministry grants ISP licence to Tamil Nadu

The Telecom Ministry has issued the Internet Service Provider license to the Tamil Nadu government for providing broadband and internet services, a top official of Arasu Cable Television said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X