டாடா க்ரோமா நிறுவனத்துடன் உடன் இணைந்தது ஆப்பிள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கப் பல முயற்சிகள் செய்துவரும் நிலையில், ஆப்பிள் ஸ்டோரை அமைப்பதில் அதிகளவிலான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

இப்பிரச்சனையைத் தீர்க்க ஆப்பிள் நிறுவனம் சோதனை திட்டமாக டாடா குழும நிறுவனத்தின் எலக்ட்ரானிக் விற்பனை பிரிவுகளில் ஒன்றான க்ரோமா நிறுவனத்துடன் இணைந்து தனது தயாரிப்புகளை விற்கத் திட்டமிட்டுள்ளது.

சோதனை திட்டம்

சோதனை திட்டம்

இப்புதிய கூட்டணியின் விற்பனையை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முக்கியமான 6 க்ரோமா கடைகளில் மட்டும் தனது தயாரிப்புகளை விற்கத் திட்டமிட்டுள்ளது.

இன்பினிட்டி ரீடைல்

இன்பினிட்டி ரீடைல்

ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இக்கிளைகளில் ஆப்பிள் நிறுவனம் தங்களது தயாரிப்புகளைச் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். என இன்பினிட்டி ரீடைல் நிறுவனத்தின் தலைவர் ஆவ்ஜித் மித்ரா தெரிவித்தார்.

க்ரோமா நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனம் தான் இந்த இன்பினிட்டி ரீடைல்.

 

 

ஆப்பிள் ஸ்பேஸ்

ஆப்பிள் ஸ்பேஸ்

க்ரோமா கடைகளில் அமைக்கப்படும் ஆப்பிள் ஸ்பேஸ் அமைப்புகள் 400 முதல் 500 சதுரடி அளவில் இருக்கும். இவை மும்பையில், மல்லாட், ஜூஹூ, ஓப்ராய் மால், பீனிக்ஸ் மால் மற்றும் காத்கோபார் பகுதிகளில் உள்ள கிளைகளில் அமைக்கப்பட உள்ளது.

பெங்களூரில் ஜெயாநகரப் பகுதியில் அமைந்துள்ள க்ரோமா கிடைகளிலும் ஆப்பிள் ஸ்பேஸ் அமைக்கப்பட உள்ளது.

 

ஆப்பிள் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ்

ஆப்பிள் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ்

அக்டோபர் 16ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள ஆப்பிள் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திட்டத்துடனே ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

12 லட்சம் மொபைல் விற்பனை

12 லட்சம் மொபைல் விற்பனை

ஆப்பிள் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இவை கடந்த வருடம் முழுவதும் இந்தியாவில் விற்கப்பட்ட ஐபோன்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

35 லட்சம் பொருட்கள்

35 லட்சம் பொருட்கள்

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் 35 லட்ச சாதனங்களை விற்க உள்ளது. இந்த இலக்கை அடைய ஆப்பிள் நிறுவனம் இந்தியா முழுவதும் அதிகளவிலான விளம்பரங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

விளம்பரத்திற்காக மட்டும் ரூ.300 கோடி

விளம்பரத்திற்காக மட்டும் ரூ.300 கோடி

அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனம் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் முழுவதும் வெறும் 120 கோடி ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் விளம்பரத்திற்காகச் செலவு செய்திருந்தது.

 

 

அக்டோபர் 16

அக்டோபர் 16

வருகிற அக்டோபர் 16ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

அமெரிக்காவில் வெளியிட்ட 3 நாட்களில் சுமார் 1.3 கோடி போன்களை ஆப்பிள் விற்பனை செய்து ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சரித்திரத்தைப் படைத்தது.

 

விலை என்ன..?

விலை என்ன..?

இந்நியாவில் வெளியிட உள்ள இந்நிறுவன தயாரிப்பகள் சுமார் 60,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finally, Apple to launch its stores in India, at Croma

The Apple Store is coming to India — or at least a few counters are, along with those signature wooden tables. They will be debuting in India in partnership with Tata-owned consumer electronics chain Croma, which will host Apple at six of its locations as a pilot.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X