இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி ராஜீவ் பன்சால் ராஜினாமா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 3,398 கோடி ரூபாய் லாப பெற்ற இன்போசிஸ் நிறுவனம் இன்று மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக (சிஎப்ஓ) செயல்பட்டு வந்த ராஜீவ் பன்சால் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 
இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி ராஜீவ் பன்சால் ராஜினாமா..!

இதனால் ராஜீவ் பன்சால் அக்டோபர் 12, 2015 முதல் சிஎப்ஓ மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பதிவியில் இருந்து விலகுகிறார். டிசம்பர் 31ஆம் தேதி முதல் நிறுவனத்தை விட்டு முழுமையாக வெளியேறுவதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராஜீவ் பன்சால் பணியிடத்தில் எம்.டி.ரங்கநாத் நியமிக்கப்பட்டு உள்ளார் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது பணியும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி ராஜீவ் பன்சால் ராஜினாமா..!

ராஜீவ் அவர்களின் ராஜினாமா குறித்து இன்போசிஸ் நிர்வாகமும் சிரி, ராஜீவ் அவர்களும் சரி எந்தவிதமாக தகவல்களும் அளிக்கவில்லை.

ராஜீவ் பன்சால் கடந்த நவம்பர் 2011ஆம் ஆண்டுச் சிஎப்ஒ-வாக நியமிக்கப்பட்டார். இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பாலகிருஷ்னன் தனது சீஎப்ஓ பதவியில் இருந்து இந்நிறுவனத்தின் பிபீஓ, பைநாக்ல், மற்றும் இந்திய வர்த்தகத்திற்குப் பொறுப்பேற்ற உடன் ராஜீவ் பன்சால் சீஎப்ஓ பதிவியில் நியமிக்கப்பட்டார்.

தற்போது ரங்கநாத் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர், மூலோபாய நடவடிக்கைகள் மற்றும் சீஇஓ அலுவலகத்தின் தலைவர் ஆகியவற்றில் பொறுப்பு வகிக்கிறார். இந்நிறுவனத்தில் சுமார் 15 வருடமாகப் பல நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் ரகுநந்தன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys CFO Rajiv Bansal resigns

Infosys on Monday informed the stock exchanges about key managerial changes in the organisation. The company said that Rajiv Bansal who is the Chief Financial Officer of the company stepped down as the CFO and key managerial personnel effective.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X