ரூ.3,400 கோடி லாப உயர்வில் இன்போசிஸ்.. முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 8.8 சதவீத வளர்ச்சியுடன் 3,398 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.

 

இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் தனது வர்த்தகத்தைச் செய்து வருகிறது. திங்கட்கிழமை காலையில் வெளியிடப்பட்ட 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனம் கடந்த காலாண்டை விட 8.8 சதவீதம் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

வருவாய்

வருவாய்

இக்காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 8.9 சதவீதம் உயர்ந்து 15,635 கோடி ரூபாயாக உள்ளது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

முதலீட்டாளர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 10 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மீதான வர்த்தகம் 2.3% வரை சரிந்துள்ளது.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நாணய மதிப்பீடு பிரச்சனை இன்போசிஸ் நிறுவனத்தை அதிகளவில் பாதித்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் கணிப்புகளை 7.2-9.2 சதவீதத்தில் இருந்து 6.4-8.4 சதவீதமாக குறைந்துள்ளது.

பணியாளர்கள் வெளியேற்பு
 

பணியாளர்கள் வெளியேற்பு

2வது காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் பணியாளர் வெளியேற்பு அளவு 19.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இதன் அளவு 19.2 சதவீதமாக இருந்தது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 24.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

புதிய திட்ட முறைகள்

புதிய திட்ட முறைகள்

மேலும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் ஆதிகாரியான யு.பி.பிரவீன் கூறுகையில், புதிய திட்டங்கள் மற்றும் வடிவங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது, அதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளருடன் ஒரு புதிய பிணைப்பை உருவாக்கியுள்ளது.

யு.பி.பிரவீன்

யு.பி.பிரவீன்

இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போது வருவாய் வளர்ச்சி, உற்பத்தி, வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் பணியாளர்கள் வெளியேற்பு அளவுகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலகட்டத்தில் புதிதாக 82 வாடிக்கையாளர்களை இன்போசில் நிறுவனம் பெற்றுள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

இக்காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக 8,453 ஊழியர்கள் இணைந்துள்ளனர். இதனால் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை அளவு 1,87,976 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q2 net profit up at Rs. 3,398 cr; lowers dollar guidance

Infosys has posted net profit of Rs. 3,398 crore in the September ended quarter, an 8.8 per cent growth over the June-ended quarter, ahead of analyst expectations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X