முதல் முறையாக இந்திய நிறுவனத்தை கைபற்றியது சிஸ்கோ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நெட்வொர்கிங் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் முடிசூடா மன்னாக திகழும் சிஸ்கோ நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை கைபற்றியுள்ளது.

 

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாவா (Pawaa) என்னும் ஐடி பாதுக்காப்பு நிறுவனத்தை சிஸ்கோ நேரடியாக கைபற்றியுள்ளது.

பாவா

பாவா

இந்நிறுவனம் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கிளவுட் மூலம் செயல்படும் பைல் டிரான்ஸ்பர் சாப்ட்வேர் போன்ற சேவைகள் வழங்கி வரும் நிலையில், இச்சேவையை சிஸ்கோ சாப்ட்வேர் பிளாட்பார்ம் குரூப் உடன் இணைக்க சிஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி பாவா நிறுவனத்தை சிஸ்கோ முழுமையாக கைபற்றிய நிலையில் பாவா நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் பாஸ்கரன் சிஸ்கோ பாதுகாப்பு பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஸ்கோ

சிஸ்கோ

இந்தியாவில் ஐடி விட பாதுகாப்பு துறை சார்ந்த வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஆனால் இத்துறையில் திறமைவாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என சிஸ்கோ நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் பங்கஜ் பட்டேல் தெரிவித்தார்.

ஊக்க திட்டம்..
 

ஊக்க திட்டம்..

பாவா நிறுவனத்தை சிஸ்கோவின் Entrepreneur-in-Residence programme திட்டத்தின் கீழ் இணைக்கப்பட உள்ளதாக சிஸ்கோ நிறுவாகம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சந்தையில் முக்கிய தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் சிறு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.

முதலீடு...

முதலீடு...

ஏற்கனவே சிஸ்கோ நிறுவனம் இந்தியாவில் கோவேக்சிஸ், மாப்ஸ்டாக்ஸ் மற்றும் மொபிக்விக் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், முழுமையாக கைபற்றிய ஓரே நிறுவனம் பாவா தான்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cisco makes its first India acquisition

Technology major Cisco has made its first acquisition in India by taking over Bengaluru-based IT security company Pawaa for an undisclosed amount.
Story first published: Tuesday, October 13, 2015, 10:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X