டெல்லி: மத்திய அரசு நாட்டின் மின்சார உற்பத்தியை அதிகரிக்கப் பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மின்சாரத்தைச் சேமிக்கவும் அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் பல புதிய முயற்சிகளைச் செய்து வருகிறது.
இதில் ஒரு பகுதி தான் மின்சாரத் துறையின் எல்இடி விநியோக திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் இன்கேடசென்ஸ் பல்ப் மற்றும் சிஎப்எல் பல்புகளின் பயன்பாட்டைக் குறைந்து எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவது தான்.
தற்போது இத்திட்டம் முழுமையாக ஆந்திராவிலும், சோதனை திட்டமாகப் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
200 ரூபாய் மிச்சம்...
கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உள்ள 90 சதவீத வீடுகளில் மாதம் 200 ரூபாய் வரை மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி
மத்திய அரசின் இத்திட்ட நடவடிக்கையால் எல்.இ.டி பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரத்தைத் தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல்
இத்திட்டத்தை நாடு முழுவதும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும். இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
13 மாநிலங்கள்
ஜனவரி முதல், டி.இ.எல்.பி. எனப்படும் (Domestic Efficient Lighting Programme) திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழுவதும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
விநியோகம்
இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது.இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி பல்புகள் இத்திட்டத்தின் கிழ் வழங்கப்பட்டுள்ளன.
உற்பத்தி
நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளைப் புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.
மின்சாரச் சிக்கனம்
சாதாரணக் குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாகக் கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது.
ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது.
மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தைக் கொடுக்கும். லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.
என்ன கிடைக்கிறது
அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளைப் பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது. 'பீக் ஹவர்' (Peak Hour) எனப்படும், உச்சக்கட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.
2.71 கோடி ரூபாய் சேமிப்பு...
தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது. மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.
விலை எப்படி?
மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், 650 - 700 ரூபாயாக விற்கப்பட்ட எல்.இ.டி விளக்கின் விலை, இப்போது 300 - 350 ரூபாய் வரை குறைந்துள்ளது.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது மீதமுள்ள தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications