ரிலையன்ஸ் கேபிடல் ஊழியர்களுக்குச் சுக்கிரன் திசை.. ரூ.150 கோடி மதிப்பிலான பங்குகள் விநியோகம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல் ஊழியர்களுக்குப் பங்குகள் வழங்கும் திட்டத்தை (ESOP) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 

இந்நிறுவனத்தின் ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், நிறுவனத்தில் நிலைத்திருக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சுமார் ரூ.150 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்கத் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் தற்போது இந்தியாவில் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், புரோக்கிங் மற்றும் புரோக்கிங் அல்லாத நிதி சேவைகளை வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் அசெட் மேனேஜ்மெண்ட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ், ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட் டீஸ் போன்ற துணை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 250 ஊழியர்களுக்குப் பங்குகளை வழங்க இருக்கிறது.

முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சிஇஓ சாம் கோஷ், மதுசூதன் கெலா மற்ற உயர் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தில் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல்
 

ரிலையன்ஸ் கேப்பிடல்

இந்தத் திட்டம் திறமையானவர்களுக்கு மட்டும் உதவி செய்வது மட்டுமல்ல, ஊழியர்களை ஒழுங்குபடுத்தவும், நிறுவனத்தின் பங்குதாரராக மாறும் வாய்ப்பையும் வழங்குகிறோம் என்று ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1.6% பங்குகள்

1.6% பங்குகள்

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பங்குகள் ரிலையன்ஸ் கேபிடலின் சந்தை முதலீட்டில் 1.6 சதவீதமாகும்.

ஒரே வழி..

ஒரே வழி..

சந்தையில் நிலைத்திருக்க ஒரே வழி.. இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களின் குமுறல்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Capital Announces Rs 150-Crore ESOP Scheme

Financial services major Reliance Capital has announced a major ESOP scheme under which select employees across all major operating businesses would be granted stock options with a notional value of Rs 150 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X