5 நாள் தொடர் விடுமுறையில் வங்கிகள் தப்பியது.. வெள்ளிக்கிழமை வங்கி மற்றும் அரசு அலுவலகம் இயங்கும்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக நாளை (புதன்கிழமை 21.10.2015) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமை மாற்றியதால் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அனைத்து வங்கி மற்றும் அரசு அலுவலகங்களும் இயங்கும்.

ஏடிஎம் இயந்திரம்

ஏடிஎம் இயந்திரம்

பண்டிகை விடுமுறை காலத்தில் மக்களுக்கு ஏதுவாகப் பணத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் விடுமுறைக்கு ஏற்ற வகையில் பணத்தை இருப்பு வைத்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கான விடுமுறையைச் சனிக்கிழமை அதாவது 24ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் செயல்படும்.

5 நாள் விடுமுறை

5 நாள் விடுமுறை

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மத்திய அரசின் அறிவிப்புகள் படி இயங்குவதால் வெள்ளிக்கிழமை வங்கிகள் இயங்காது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளது. ஆனாலும் இதுகுறித்து எந்த ஒரு வங்கியும் அறிவிப்புகள் வெளியிடவில்லை.

இணையதள வங்கி
 

இணையதள வங்கி

மேலும் அனைத்து வங்கிகளின் இணையதள வங்கி சேவை இயங்கும் இதனால் மக்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப NEFT மற்றும் RTGS முறைகளைப் பயன்படுத்துப் பணப் பரிமாற்றத்தை செய்துகொள்ளலாம்.

கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலம்

கர்நாடகாவில் 22 முதல் 25ஆம் தேதி வரையும், அக்டோபர் 27ஆம் வால்மீகி ஜெயந்தி பண்டிகை காரணமாகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிற தென்னிந்தி மாநிலம்

பிற தென்னிந்தி மாநிலம்

அதேபோல் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநிலங்களிலும் 22 முதல் 25ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் இதேபோன்ற விடுமுறையைத் தான் வங்கிகள் கடைப்பிடிக்கிறது.

சனிக்கிழமை விடுமுறை

சனிக்கிழமை விடுமுறை

கேரளா, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநிலங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை. வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவிப்பின் பிடி 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை என்பதால் இந்த விடுமுறை 4 நாட்களாக நீண்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Consecutive bank holidays pose problems

In tamilnadu, banks are closed on Oct 21, 22 and 24. This is followed by Sunday on Oct 25.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X