இறக்குமதி செய்தாலும் விலை குறைந்தபாடு இல்லை.. 210 ரூபாயாக உயர்ந்த துவரம் பருப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பருப்பு விலை மற்றும் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு பல ஆயிரம் டன் பருப்புகளை இறக்குமதி செய்தாலும், இதன் விலை குறைந்தபாடு இல்லை.

 

கடந்த வாரம் 190 ரூபாயாக விற்கப்பட்ட துவரம் பருப்புத் தற்போது 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

உற்பத்தி குறைவு

உற்பத்தி குறைவு

2014-15ஆம் ஆண்டில் இந்தியாவில் பருவமழை போன்ற பல்வேறு காரணங்களால் தானிய வகைகளின் உற்பத்தி அளவு 2 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இதுவே இப்பிரச்சனைகளுக்குத் துவக்கப் புள்ளியாக அமைந்தது.

இதன் பின் தொடர் ஏற்றுமதி மற்றும் பதுக்கல் காரணமாக இந்திய சந்தையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியது.

பதுக்கல்..

பதுக்கல்..

பருப்பு வகைகளின் விலை உயர்வைத் தடுக்க நாட்டின் பதுக்கப்பட்ட பருப்பு மற்றும் தானிய வகைகளை வெளியில் கொண்டு வர மத்திய அரசு செய்த அதிரடி சோதனைகளில் இறங்கியது.

இதில் 5 மாநிலத்தில் மட்டும் சுமார் 5,800 டன் எடை கொண்ட பருப்புகள் பதுக்கல்காரர்களிடம் இருத்து அரசு பரிமுதல் செய்யதுள்ளது.

தமாதமான இறக்குமதி
 

தமாதமான இறக்குமதி

இந்தியாவில் பருவ மழை குறைந்ததால் பருப்பு மற்றும் முக்கியத் தானியங்களின் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு முன்கூடியே கணித்து இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசு பிற திட்டங்களில் கவனத்தைச் செலுத்தியதால், உணவு மற்றும் அதன் சார்ந்த பிரச்சனைகளில் தவறவிட்டது. பருப்பு விலை உயர்விற்கு இதுவும் ஒரு காரணம்.

தொடர் இறக்குமதி..

தொடர் இறக்குமதி..

மத்திய நிதியமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் அறிவித்த வகையில் 5,000 டன்னுக்கும் அதிகமான பருப்பு வகைகள் இறக்குமதி செய்ய அறிவிப்புகள் விடுதாலும், அவை இந்திய மக்களிடம் வந்து சேர குறைந்தது 30 நாட்கள் தேவைப்படும்.

இதனால் இன்னும் சில நாட்களுக்குப் பருப்பு வகைகளின் விலை தொடர் உயர்விலேயே இருக்கும்.

40,000 டன் உபரி இருப்பு

40,000 டன் உபரி இருப்பு

இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய சந்தையில் சுமார் 40,000 டன் அளவிலான பருப்புகளை உபரி இருப்பாக வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மானிய விலை

மானிய விலை

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இறக்குமதி பருப்புகள் இந்திய கரைக்கு வந்த உடன் மத்திய அரசு மானிய விலையில் துவரம் பருப்பை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

இந்தியாவில் பதுக்கல்களைக் குறைக்க மாநில அரசுகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதனீட்டாளர்கள் மற்றும் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் இருப்பு அளவுகளை முற்றிலும் ரத்துச் செய்ய மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான ஆணையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் அளித்து வருகிறது.

எம்எம்டிசி

எம்எம்டிசி

மத்திய அரசு வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி இதுவரை 5,000 டன் துவரம் பருப்பு மற்றும் 2,000 டன் பட்டாணிகளை இறக்குமதி செய்வதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

பரிமுதல்

பரிமுதல்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிரடி சோதனைகளின் மூலம் தெலங்கானாவில் 2,546 டன், மத்திய பிரதேசத்தில் 2,295 டன், ஆந்திர பிரதேசத்தில் 600 டன், கர்நாடகாவில் 360 டன் மற்றும் மகாராஷ்டிராவில் 1 டன் பருப்புகளை இறக்குமதி செய்துள்ளது.

தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

துறைமுகம்

துறைமுகம்

மேலும் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கும் பருப்பு இருப்புகளை விரைவில் சந்தைப்படுத்த மாநில அரசுகள் உதவ வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

விலை நிலை

விலை நிலை

சில்லறை சந்தையில் துவரம் பருப்பு 1 கிலோ 210 ரூபாயாகவும், உளுத்தம் பருப்பு 198 ரூபாயாகவும், பாசிப்பருப்பு 135 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pulses Touch Rs. 210/Kg, 5,800 Tonnes Seized From Hoarders

Over 5,800 tonnes of pulses have been seized in five states during raids conducted on hoarders in the last few months even as prices continue to rise and touched Rs. 210 per kg.
Story first published: Wednesday, October 21, 2015, 14:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X