டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 1,200 ஊழியர்கள் பணி நீக்கம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: சீன நாட்டில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களால் பிரட்டன் சந்தையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாடு அதிகளவில் பாதித்துள்ளது.

 

இதனால் ஐரோப்பிய சந்தையில் இயங்கும் 3 டாடா ஸ்டீல் நிறுவன தொழிற்சாலையில் சுமார் 1,200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக டாடா ஸ்டீல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் அதிகளவிலான சீன இறக்குமதி, வலிமையான பவுண்ட் மதிப்பு மற்றும் உயர்வான மின்சாரக் கட்டணங்கள் தான் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

டாடா ஸ்டீல் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், ஐரோப்பிய சந்தையில் ஸ்டீல் பிளேட்களின் உற்பத்தியை நிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1200 ஊழியர்கள்

1200 ஊழியர்கள்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் சுமார் 1,200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் ஸ்டீல் பிளேட் உற்பத்தி மற்றும் இரண்டு ஓவன்களை முட உள்ளதாக அறிவித்துள்ளது.

இறக்குமதி
 

இறக்குமதி

ஐரோப்பிய சந்தையில் ஸ்டீல் பிளேட்களின் இறக்குமதி 2 மடங்காகவும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களின் அளவுகள் 4 மடங்காக உயர்ந்துள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய சந்தையில் இதன் விலை அளவுகள் அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

மேலும் இதேநிலை அடுத்தச் சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் டாடா ஸ்டீல் உட்படப் பல தொழிற்சாலைகள் ஐரோப்பிய சந்தையில் மூடுவிழா காணத் துவங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Steel to stop steel plate production, axes 1,200 jobs

Tata Steel on Tuesday announced a restructuring and job cuts at its European operations saying that this was due to a flood of cheap imports particularly from China, a strong pound and high electricity costs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X