டெல்லி: பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு கஷ்டம் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்களைக் கேட்டால் தான் தெரியும். மக்கள் கூட்டம் ஒரு பக்கம் நம்மை அழுத்தினாலும், பஸ் கட்டணங்கள் நம்முடைய கழுத்தை நெறிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் விமான நிறுவனங்கள் புதிய பயணிகளைக் கவர உள்நாட்டுப் பயணக் கட்டணங்களில் அதிரடி சலுகையை வழங்கி வருகிறது.
முன்பதிவில் 200% உயர்வு
இந்திய விமான நிறுவனங்கள் இத்தகைய சலுகை கட்டணங்களை அடிக்கடி அறிவிப்பதன் மூலம் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை இந்திய விமான நிறுவனங்களில் சுமார் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
பல பிரச்சனைகளைச் சமாளித்து அஜய் சிங் தலைமையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சிறப்பாக வளர்த்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக 300 டிக்கெட்களை வெறும் 749 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது
ரூ.749 கட்டணம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் டெல்லி-அமிர்தசரஸ், அகமதாபாத்-மும்பை போன்ற குறுகிய வழித்தடங்களுக்கு ரூ.749 முதல் (வரிகள் இல்லாமல்) பயணம் மேற்கொள்ளப் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் சுமார் 3 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்வதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணத்திற்கு 3,999 ரூபாய்
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு வழித்தட பயணத்திற்கு ரூ.3,999 முதல் சிறப்புத் தள்ளுபடி சலுகை வழங்கியுள்ளது.
அக்டோபர் 29ஆம் தேதி
இந்தக் கட்டண சலுகையில் வருகிற 29-ந்தேதி வரை ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயண நாள்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கட்டண சலுகையில் முன்பதிவு செய்யும் நபர்கள் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி 2016 ஆண்டுப் பிப்ரவரி 1 முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications