பெங்களூரு: ஆப்பிள் நிறுவனத்தின் எந்த ஒரு தயாரிப்பு வெளியானாலும் திருவிழா போல இருக்கும். ஆனால் இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஐபோன் 6எஸ் வெளியீடு முற்றிலும் மாறுபட்ட நிலையை உருவாக்கியுள்ளது.
தென் ஆசியா பகுதியில் குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மற்றும் வர்த்தகம் அதிகளவில் விரிந்துள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டில் ஐபோன் விற்பனை வெறும் 35 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவு 93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் புதிய ஐபோன் 6 எஸ் வெளியீட்டுக் காரணமாகவும், அக்டோபர் மாதத்தில் வரும் விழாக்காலத் தள்ளுபடிகளுக்காகவும் மக்கள் ஐபோன் வாங்குவதை ஒத்துவைத்துள்ளனர்.
தள்ளுபடி
பொதுவாக இந்தியாவில் அக்டோபர் மாத காலகட்டத்தில் பண்டிகைக்கான தள்ளுபடிகள் அதிகளவில் இருக்கும். இதேநேரத்தில் நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொடர்ந்து எட்டி வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தள்ளுபடிகளுக்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் செப்டம்பர் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை வளர்ச்சி வெறும் 35 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இந்தியாவில் ஐபோன் 6எஸ்
ஆப்பிள் நிறுவனம் உலகில் பல இடங்களில் தனது ஐபோன் 6எஸ் மாடல் போன்களைச் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட நிலையில், 3 வார காலத்திற்குப் பிறகு அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியானது.
டிம் குக்
கடந்த காலாண்டில் இந்தியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியது என ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.
காலாண்டு முடிவுகள்
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications