கதவைத் திறந்தது விஸ்தாரா.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் சஞ்சீவ் கபூர்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கிடியில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் போது, பிளாஷ் சேல் என்ற தள்ளுபடி விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற தலைமை செயல் ஆதிகாரி சஞ்சீவ் கபூர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சஞ்சீவ் கபூர் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார்.

சனி, சனிக்கிழமையுடன் முடிந்தது...

சனி, சனிக்கிழமையுடன் முடிந்தது...

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாகம் கலாநிதி மாறனிடம் இருந்து அஜய் சிங்கிற்கு மாறிய நிலையில், சஞ்சீவ் கபூர் நிறுவனத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்தார்.

தற்போது விஸ்தாரா நிறுவனம் இவருக்கான நியமன ஆணையை வழங்கியதன் பேரில் வருகிற சனிக்கிழமையுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளார்.

சஞ்சீவ் கபூர்

சஞ்சீவ் கபூர்

கடந்த நவம்பர் 1,2013ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சஞ்சீவ் கபூர் (48) 3 வருட ஒப்பந்த முறையில் நிறுவனத்தில் இணைந்தார்.

அதற்கு முன் பங்களாதேஷ் நாட்டின் ஜிஎம்ஜி ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பேயின் என்னும் ஏர்லைன்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நியமனம் மற்றும் வெளியேற்றம்..
 

நியமனம் மற்றும் வெளியேற்றம்..

சஞ்சீவ் கபூர் அவர்களின் விஸ்தார நிறுவனத்தின் நியமனம் குறித்தும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம் பற்றி இருநிறுவனங்களும் எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 3.94 சதவீதம் வரை உயர்ந்து 44.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஓ

ஐபிஓ

மேலும் பங்குச்சந்தையில் பட்டியலிட இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வமுடன் செயல்படுகிறது. இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது வாடியா குழுமத்தின் கோஏர் நிறுவனமும் சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sanjiv Kapoor steps down as SpiceJet's COO; set to join Vistara

Sanjiv Kapoor has stepped down as chief operating officer at Spice-Jet, bringing to an end a seesaw two-year tenure marked by the low-cost airline's string of financial losses, near closure, changed ownership and eventual return to profitability. He will join the leadership team at Vistara, a person with knowledge of the matter said.
Story first published: Friday, October 30, 2015, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X