விழாக் காலங்களில் மக்கள் செலவிடும் தொகை பாதியாகக் குறைந்தது.. அசோசாம் திடுக்கிடும் தகவல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்தட்டுக் குடும்பங்கள் விழாக்காலத்தில் செலவிடும் தொகை கடந்த வருடத்தை விட 43 சதவீதம் குறைந்துள்ளதாக அசோசாம் அமைப்பு கூறியுள்ளது.

 

இத்தகைய நிலைக்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கல்விக் கட்டணங்கள் உயர்வு மற்றும் குறைவான வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த ஆய்வில் அதிகளவில் கலந்துகொண்ட டெல்லி மக்கள் கூறுகையில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், கல்விக் கட்டணங்கள் உயர்வு, குறைந்தச அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் குறைவான சம்பள அளவுகளின் காரணமாக இந்த வருடம் விழாக்காலத்தில் தாங்கள் குறைவான அளவில் மட்டும் செலவு செய்ததாக அறிவித்தனர்.

நகரங்கள்

நகரங்கள்

செலவுகளை அதிகளவில் குறைத்த நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து அகமதாபாத், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, சென்னை ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

கிராமப்புறம்..

கிராமப்புறம்..

மேலும் குறைந்த பருவமழை, குறைவான வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த அளவிலான வருமான போன்ற முக்கியக் காரணங்களால் இந்திய கிராமப்புறங்களில் மக்களின் தேவைகள் கடந்த வருடத்தை விடவும் 48 சதவீதம் வரை குறைந்துள்ளது.

முக்கியமான காரணிகள்
 

முக்கியமான காரணிகள்

மேலும் அதீத பணவீக்கம், நிலையற்ற பொருளாதார நிலையின் காரணமாக நடுத்தரக் குடும்பங்கள் அதிகளவிலான செலவுகளைக் குறைத்துள்ளனர். குறிப்பாகத் தீபாவளி பண்டிகை காலத்தில் பொருட் செலவில் அதிகளவில் குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

அசோசாம் இதற்காக ஆய்வை அக்டோபர் மாதம் இந்தியாவின் முக்கியப் பகுதிகளான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சண்டிகார் மற்றும் டேராடன் ஆகிய பகுதிகளில் தனது ஆய்வை நடத்தியது.

பல துறைகள்

பல துறைகள்

இந்த ஆய்வில் அட்டோமொபைல், பயோடெக், BFSI, எனர்ஜி, FMCG, ஐடி போன்ற பல்வேறு துறை சார்ந்த 1650 பேர் கலந்துகொண்டனர். இதில் 67 சதவீதம் பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Festive season spending to go down by 43% this year: Assocham

Middle and lower income families will spend 43 per cent less this festive season than last year due to inflated prices of daily food items, coupled with high education cost and grim job market scenario, says an Assocham survey.
Story first published: Monday, November 9, 2015, 18:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X