ஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதியைத் திரட்ட மத்திய அரசு, சேவை வரியில் விதிக்கப்பட்ட கூடுதலான 0.5% வரி இந்திய நிறுவனங்கள் மத்தியில் முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் வர்த்தகம் செய்ய ஏதுவான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டி இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் கூடுதல் வரி விதிப்பு ஒரு மோசமான நடவடிக்கை.

அதுமட்டும் அல்லாமல் நடைமுறையில் இதை அமலாக்கம் செய்யக் குறைந்த அவகாசம் (8 நாள்) கொடுத்துள்ளது இந்திய நிறுவனங்களுக்குப் புதிய தலைவலியாக உருவாகியுள்ளது.

0.5% கூடுதல் வரி

0.5% கூடுதல் வரி

மத்திய அரசு நவம்பர் மாதம் 6ஆம் தேதி ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதி திரட்டும் விதமாக இந்திய நிறுவனங்களால் கொடுக்கப்படும் அனைத்துச் சேவையிலும் கூடுதலாக 0.5 சதவீத வரியை விதித்தது.

இப்புதிய வரி விதிப்பு வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட 2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதலாக 2 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

FICCI அமைப்பு
 

FICCI அமைப்பு

புதிய வரி விதிப்பின் அறிவிப்புகள் வெளியாகி வெறும் 8 நாட்களில் அதனை அமலாக்கம் செய்ய வேண்டியது நடைமுறையில் மிகவும் கடினமானது. மேலும் இந்த வரி விதிப்பு ஜனவரி மாதத்தில் தான் அமலாக்கம் செய்ய வேண்டும் என FICCI அமைப்பு வருவாய் பிரிவின் செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்தார்.

 எளிமையான வர்த்தகம்

எளிமையான வர்த்தகம்

இத்தகைய திடீர் வரி விதிப்பு மற்றும் அமலாக்கத்தின் இந்தியாவில் எளிமையான வர்த்தகம் செய்யும் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது.

இந்தியா 130 வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

மேலும் மத்திய அரசு இந்திய வர்த்தக அமைப்பில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியை மாற்றி அமைக்கப்படுவதால், இந்திய நிறுவனங்கள் மீண்டும் தங்களது விரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும் என CII அமைப்பு தெரிவித்துள்ளது.

சரியான விளக்கம்

சரியான விளக்கம்

மேலும் கூடுதல் 0.5% சேவை வரி விதிப்பு குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் CII அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாகப் பிரிமிட்வ் விரியை பயன்படுத்தவோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

உதாரணமாக ஒரு டிராவல் ஏஜென்சி நிறுவனம் உள்நாட்டு விமானச் சேவைக்கு 0.7% சேவை வரியும், வெளிநாட்டு விமானச் சேவைக்கு 1.4% சேவை வரி விதிக்கிறது. இதில் 0.5% கூடுதல் வரித் தனியாக விதிக்க வேண்டுமா அல்லது பொதுவான வரியை விதிக்க வேண்டுமா எனக் குழப்பத்தில் நிறுவனங்கள் உள்ளது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taxed India Inc asks Modi government to delay Swachh Bharat cess

Indian industry hasn't taken too kindly to the recent imposition of a cess to help fund the Swachh Bharat initiative.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X