அனில் அம்பானிக்கு அடித்தது யோகம்.. ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தில் ரூ.15,000 கோடி முதலீடு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளைக் கனடா பென்ஷன் பண்ட் நிறுவன கைப்பற்றியுள்ளது.

 

ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் ஒப்புதல் அளித்த 49 சதவீத பங்கு விற்பனையின் மூலம் இந்நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுகிறது. மேலும் நிர்வாகக் கட்டுப்பாடுகள் முழுவதும் 51 சதவீத பங்கு இருப்புடன் ரிலையன்ஸ் இன்பரா வசம் உள்ளது குறிப்பிதக்கது.

ரிலையன்ஸ் இன்பரா

ரிலையன்ஸ் இன்பரா

மும்பையில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனமான ரிலையன்ஸ் இன்பரா-வின் 49 சதவீத பங்குகளை 417 ரூபாய் என்ற விலையில் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து புதிய முதலீட்டைப் பெறுகிறது.

கனடா பென்ஷன் பண்ட்

கனடா பென்ஷன் பண்ட்

கனடா நாட்டின் பொதுத்துறை பென்ஷன் முதலீட்டு நிறுவனமான கூட்டமைப்பின் (Public Sector Pension Investment Board) கிளைகளில் ஒன்றான இந்தக் கனடா பென்ஷன் பண்ட் நிறுவனம் சுமார் 112 பில்லியன் கடனா டாலர் சொத்துக்களைக் கையாண்டு வருகிறது. இந்நாட்டின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் நிறுவனங்களில் மிக முக்கியமானவை இது.

கடன் அளவுகள்
 

கடன் அளவுகள்

தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் மொத்த கடன் அளவுகள் 16,000 கோடி ரூபாய்.

இப்புதிய முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் கடன் அளவுகள் 5,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்படும் என ரிலையன்ஸ் இன்பரா தெரிவித்துள்ளது.

 

30 லட்சம் வாடிக்கையாளர்கள்

30 லட்சம் வாடிக்கையாளர்கள்

மும்பையைத் தலையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டு 1800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

7,700 கோடி வருவாய்

7,700 கோடி வருவாய்

2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 7,700 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் நாட்டில் மின்சாரத் தேவை மற்றும் அதன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இனி வரும் காலங்களில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் கண்டிப்பாக உயரும்.

பிப்பாப் டிபென்ஸ்

பிப்பாப் டிபென்ஸ்

மேலும் இன்று காலை மும்பை பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், பிப்பாப் டிபென்ஸ் நிறுவனத்தில் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வருகிற டிசம்பர் 2ஆம் தேதி கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது. இதன் மதிப்பு 1,263 கோடி ரூபாயாகும்.

ரிலையன்ஸ் இன்பரா பங்கு மதிப்பு

ரிலையன்ஸ் இன்பரா பங்கு மதிப்பு

பங்கு 0.18 சதவீதம் வரை சரிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canadian pension fund set to pick up 49% in Reliance Infra

Anil Ambani-owned Reliance Infrastructure (RInfra) has agreed to sell 49 per cent stake to a Canadian pension fund for an enterprise value of Rs.15,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X