ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் டெலிகாம் துறையில் புரட்சி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய நிறுவன குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுத்தின் கிளைகளில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வருகையால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் சேவை கட்டணத்தில் குறைவு உட்பட, புதிய புரட்சி உண்டாகும் எனப் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதுமட்டும் அல்லாமல் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்களும் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் இத்துறையில் புதிய புரட்சி உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதும் எது செய்தாலும் புதிய புரட்சியை உண்டாக்கும் வகையிலேயே செய்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை அறிமுகம் வழக்கம் போலவே இத்துறையில் புரட்சியை உண்டாக்கும் எனச் சுனில் மிட்டல் தெரிவித்தார்.

90 நாட்கள்

90 நாட்கள்

மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை அதிகப்படியாக அடுத்த 90 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய சந்தையில் போட்டி..

இந்திய சந்தையில் போட்டி..

ஏற்கனவே இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் இயங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகம் இத்துறையில் புதிய போட்டியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

தொலைத்தொடர்பு கட்டணங்கள்
 

தொலைத்தொடர்பு கட்டணங்கள்

இந்நிறுவன சேவையின் அறிமுகத்தின் மூலம் சந்தையில் தொலைத்தொடர்பு கட்டணங்கள் சுமார் 5-6 சதவீதம் வரை குறையும் எனத் தெரிகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் குறைந்த கட்டண டேட்டா சேவை அறிமுகத்தின் மூலம் டேட்டா தேவை அதிகரிக்கும். இதனால் வாய்ஸ் கால் சேவையின் பயன்பாடு மேலும் பாதிக்கும் எனப் பிட்ச் ரேடிங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய திட்ட வடிவங்கள்

புதிய திட்ட வடிவங்கள்

இந்நிலையில் சந்தையில் பிற நிறுவனங்கள் ரிலையன்ஸ் நிறுவன அறிமுகத் தாக்கத்தைச் சரிசெய்யப் புதிய திட்ட வடிவங்களை வகுத்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio entry to bring down tariffs, shake up industry: Fitch

The competition in the Indian telecom sector would intensify, mainly from the entry of Reliance Jio, which would cause fall in tariff and an industry shake up, according to Fitch Ratings.
Story first published: Saturday, November 21, 2015, 13:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X