அலெர்கன் நிறுவனத்தைக் 160 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது ஃபைசர்.. பார்மா உலகின் மிகப்பெரிய டீல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வரும் ஃபைசர் நிறுவனம் வரி சுமையைக் குறைக்கவும், அரசியல் சார்ந்த நிதியியல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அலெர்கன் மருந்து தயாரிப்பு நிறுவனத்தைச் சுமார் 160 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக ஃபைசர் திங்கட்கிழமை அறிவித்தது.

 

ஐயர்லாந்து

ஐயர்லாந்து

இந்த டீல் மூலம் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் தனது தலைமையகத்தை அமெரிக்காவில் இருந்து ஐயர்லாந்துக்கு மாற்ற உள்ளது.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

அமெரிக்கச் சந்தையிலேயே வரிச் சுமை குறைப்பதற்காகத் தலைமையகத்தை மாற்றிய மிகப்பெரிய நிறுவனம் ஃபைசர் தான், அதுவும் 160 பில்லியன் டாலர் டீல் உடன்.

இத்தகைய நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை, இவ்வழக்கத்தை உடனடியாக அமெரிக்க நிறுவனங்கள் கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டார்.

 

வரி வசூல் பாதிப்பு..
 

வரி வசூல் பாதிப்பு..

அமெரிக்கச் சந்தையில் இருந்து ஃபைசர் நிறுவன வெளியேறுவதால் பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை அமெரிக்க அரசு இழக்க உள்ளது.

மேலும் இதனைத் தடுக்கும் வகையில், தலைமையிடம் மாற்றுவதில் கிடைக்கும் வரிப் பயன்களைக் குறைக்கவும், இத்தகைய முயற்சியை யாரும் கையாளாமல் இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

வரி குறைந்தது..

வரி குறைந்தது..

அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டுக்கான வரி சட்டத்தின் படி ஃபைசர் நிறுவனம் 25 சதவீதம் கார்பரேட் வரியைச் செலுத்தியுள்ளது. ஆனால் அலெர்கன் நிறுவனம் வெறும் 15 சதவீதம் மட்டுமே வரியாகச் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் நிறுவன இணைப்பிற்குப் பின் ஃபைசர் நிறுவனம் இரு நிறுவனங்களுகம் சேர்த்து 17-18 சதவீதம் வரியை மட்டுமே செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

 

தேர்தலின் எதிரோலி

தேர்தலின் எதிரோலி

தற்போது அமெரிக்காவில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளதால் அலெர்கன்- ஃபைசர் நிறுவன இணைப்பு மற்றும் தலைமையிட மாற்ற நடவடிக்கையை உடனடியாகத் தடுக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களான பெர்னி சான்டர்ஸ் மற்றும் அதிபர் வேட்பாளரான டோனால்டு டிரம்ப் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த இணைப்பால் ஃபைசர் நிறுவனத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும், இதுவரை இரு நிறுவனமும் பணி நீக்கம் குறித்து எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

அலெர்கன்- ஃபைசர் நிறுவன இணைப்பு மற்றும் தலைமையிட மாற்றம் குறித்த செய்தி வெளியான சில நிமிடங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் சரியைத் துவங்கியது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் அலெர்கன் நிறுவனப் பங்குகள் 3.4 சதவீதமும், ஃபைசர் நிறுவனப் பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்தது.

தோல்வி

தோல்வி

18 மாதங்களுக்கு முன் ஃபைசர் நிறுவனம் பிரிட்டன் மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான AstraZeneca Plc-யை 118 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் சில நிர்வாகக் குழு பிரச்சனை மற்றும் பிரிட்டன் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகளால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pfizer to buy Allergan in $160 billion deal

Pfizer Inc on Monday said it would buy Botox maker Allergan Plc in a deal worth $160 billion to slash its U.S. tax bill, rekindling a fierce political debate over the financial maneuver.
Story first published: Tuesday, November 24, 2015, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X