ஆமீர் கான் வாயால் கெட்டது ஸ்னாப்டீல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாகக் கூறி இந்தியாவை விட்டே வெளியேறத் தனது மனைவி விரும்பியதாகப் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கூறியது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ஆமீர் கானுக்கு எதிராகவும், அவர் விளம்பர தூதரக இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு எதிராகவும் சமுக வலைத்தளங்களில் மக்கள் தாறுமாறான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல் நிறுவனம் குறித்து மக்களின் கருத்துக்களுக்கு இந்நிறுவனம், ஆமீர்கான் அவர்களின் சகிப்புத்தன்மை குறித்த செய்திகள் மற்றும் கருத்துகளுக்கு நன்றி. மேலும் நாட்டின் சகிப்புத்தன்மை பற்றி விவாதம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது, இது நாட்டில் ஒரு வகையான பதற்றத்தை உருவாக்கி வருகிறது என ஸ்னாப்டீல் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர்கள்

பாலிவுட் நடிகர்கள்

இந்தியாவில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வேகமாகச் சந்தையைப் பிடிக்கப் பாலிவுட் நடிகர்களைத் தனது விளம்பர தூதராக நியமித்தன. இதன்படி ஸ்னாப்டீல் நிறுவனமும் ஆமீர் கானை தனது ஆஸ்தான விளம்பர தூதராக நியமித்தது.

ஆமீர்கான் - ஸ்னாப்டீல்
 

ஆமீர்கான் - ஸ்னாப்டீல்

இந்நிலையில் ஆமீர்கான் விளம்பர தூதராக இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் சமுகவலை தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது ஸ்னாப்டீல் நிறுவன வர்த்தகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளது.

 

டிவிட்டர்

டிவிட்டர்

ஏற்கனவே சகிப்புத்தன்மை குறித்த கருத்துகளால் #Aamirkhan என்னும் ஹாஷ்டேக் டிவிட்டரில் பிரபலமாக இருக்கும் நிலையில், தற்போது #NoToSnapdeal என்னும் ஹாஷ்டேகும் பிரபலம் அடையத் துவங்கியுள்ளது.

சகிப்புத் தன்மை

சகிப்புத் தன்மை

இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதால், வேறு நாட்டுக்குப் போய்விடலாம் என தன் மனைவி சொன்னதாக நடிகர் ஆமிர்கான் கூறினார், இச்செய்தி பெரும் சர்ச்சையைக் மாறியுள்ளது.

நாட்டில் மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாகக் கூறி பலரும் தங்களுக்கு அரசு தந்த விருதுகளைத் திருப்பித்அளித்து வருகின்றனர். சில திரையுலகப் பிரபலங்களும் அடக்கம். விருதுகளைத் திருப்பித் தருவதை பலமாக ஆதரித்து வருகிறார் ஆமிர்கான்.

இந்த நிலையில், இதன் அடுத்த கட்டமாக நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் குறித்து பேசி சிக்கிக்கொண்டார் ஆமிர்கான்.

மோகன்தாஸ் பை

மோகன்தாஸ் பை

மேலும் நடிகர் ஆமீர்கான் கருத்துக்கு பதிலடி கொடுக்கும்வகையில் மணிப்பால் குளோபல் எஜுகேசன் தலைவர் மோகன்தாஸ் பை டிவிட் ஒன்றில் 'இந்தியாவின் அரசியல் சாசனத்தில், முழு சுதந்திரம் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஃப்ரீ நாடு' என குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் ஹீரோக்கள்

பாலிவுட் ஹீரோக்கள்

சம்பளத்தை வாரி இறைக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.. கொண்டாட்டத்தில் பாலிவுட் ஹீரோக்கள்!சம்பளத்தை வாரி இறைக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.. கொண்டாட்டத்தில் பாலிவுட் ஹீரோக்கள்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal takes the hit for Aamir's ‘intolerance' comment

Aamir is the e-retailer’s brand ambassador, and those who disagree with Aamir for his comments have now launched an online attack.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X