பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தும் நஷ்டத்தில் பறக்கிறது ஏர்ஏசியா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வதே சில நிறுவனங்களின் முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏர் ஆசியா விமான நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

 

பயணிகள் விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட், ஜெட்ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் அதிரடியான சலுகைகளைக் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

இதனால் பிற நிறுவனங்கள் பயணிகள் இல்லாமல் அதிகளவில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

ஏர்ஏசியா

ஏர்ஏசியா

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 65 கோடி அளவுக்கு நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது ஏர்ஏசியா இணைந்துள்ளது.

இதனால் 2வது காலாண்டில் நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் வரிசையில் ஏர்ஏசியா இணைந்துள்ளது.

நஷ்டத்திலும் உயர்வு..

நஷ்டத்திலும் உயர்வு..

கடந்த வருடம் இதே காலத்தில் ஏர்ஏசியாவின் நஷ்டம் அளவு 25 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

கூட்டணி..

கூட்டணி..

விமானப் போக்குவரத்தில் சேவையில் இருந்து பல வருடங்களுக்கு முன் வெளியேறிய டாடா குழுமம் இந்திய சந்தையில் மலேசியாவைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் ஏர்ஏசியா மற்றும் அருண் பாட்டியாவின் டெலஸ்ட்ரா டிரேட்பேலஸ் உடனான கூட்டணியில் விமானச் சேவையைத் துவங்கியது.

போட்டி
 

போட்டி

நாட்டின் முன்னணி நிறுவனங்களின் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடிகள் மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கடுமையான போட்டி நிலவியதும் இதன் காரணமாக ஏர்ஏசியா உட்படப் பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

ஏர்ஏசியா விமானப் பயணிகள் எண்ணிக்கை இந்தியாவில் குறைவான வளர்ச்சியைச் சந்தித்தாலும், உலகச் சந்தைகளில் சுமார் 225 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 4,16,182 பேர் இந்நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,28,089 ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia India net loss widens to Rs 65 cr in September quarter

No-frills airline AirAsia India saw its net loss widen to nearly Rs 65 crore in the three months ended September 2015 even as revenues rose during the same period.
Story first published: Monday, November 30, 2015, 16:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X