இன்போசிஸ் நிர்வாக குழு விரிவாக்கம்.. புதிய அதிகாரிகளுக்கு தேடுதல் வேட்டை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது நிர்வாகக் குழுவில் அடுத்த 6 மாதத்திற்குள் 2 புதிய அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் நிறுவன பணிகளில் வேகமாக முடிவுகளை எடுக்க 2 நிர்வாக இயக்குநர்கள் மட்டும் கொண்ட உயர்மட்ட நிர்வாகக் குழுவை அமைப்பதில் உறுதியாக உள்ளது இன்போசிஸ்.

கேவி காமத்

கேவி காமத்

சில நாட்களுக்கு முன் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் பரிக்ஸ் வங்கியின் தற்போதைய தலைவரான கேவி காமத் இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறியதால் இக்காலி இடத்திற்குக் காரோல் எம் பிராவுநெர் நியமிக்கப்பட்டார்.

இவர் அமெரிக்க வெள்ளை மாளிகையில் எனர்ஜி மற்றும் பருவநிலை மாற்றம் திட்டத்திற்கான தலைவராக இருந்தார்.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

தற்போது இன்போசிஸ் நிதித்துறை, அரசு நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகிகளைத் தேடி வருவதாக இதைப் பற்றி நன்கு அறிந்த இன்போசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜெஃப்ரி சீயன் லெமென்

ஜெஃப்ரி சீயன் லெமென்

இந்நிலையில் 2016ஆம் ஆண்டுடன் இந்நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெஃப்ரி சீயன் லெமெனின் பணிக் காலம் முடிவடைவதால் 1 வருட காலப் பணிநீட்டிப்பை இன்போசிஸ் அளித்துள்ளது.

நிர்வாகக் குழு..

நிர்வாகக் குழு..

விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் 10-11 நிர்வாகக் குழு உறுப்பினர்களையும், 2 நிர்வாக இயக்குநர்களைக் கொண்டு நிறுவனம் மிகவும் வேகமாகச் செயல்படத் திட்டத்தை வகுத்துள்ளார் சிக்கா. தற்போது இக்குழு 8 பேர் கொண்டதாக உள்ளது.

நாராயணமூர்த்தித் தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் 15 நிர்வாகக் குழு உறுப்பினர்களையும், 5 நிர்வாக இயக்குநர்களைக் கொண்டு இயங்கியது குறிப்பிடத்தக்கது.

 

புதிய திட்டம்..

புதிய திட்டம்..

நிர்வாகக் குழுவில் சேர்க்கப்படும் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள், புதிய துறையில் பணியாற்றிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இது நிறுவனத்தின் புதிய துறை அல்லது மேம்பாட்டிற்கு அதிகளவில் உதவும் என விஷால் சிக்கா தெரிவித்தார்.

மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பணியில் தனக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys plans to add two more members to its board in next 6 months

Infosys plans to add at least two members to its board in the next six months even as it intends to stick to its strategy of having a lean board with not more than two executive directors to ensure faster decision-making, two executives familiar with the matter said.
Story first published: Monday, November 30, 2015, 12:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X