மத்திய அரசின் புதிய கொள்முதல் திட்டம்.. எல்ஈடி பல்புகளின் விலை 20 ரூபாய் குறையும்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மின் விளக்குத் துறையில் புதிய புரட்சி ஏற்பட உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் மத்திய அரசு சுமார் 5 கோடி எல்ஈடி பல்புகளைக் கொள்முதல் செய்யும் திட்டம் வெளியாக உள்ளது.

 

இதனால் சந்தையில், சிஎஃப்எல் பல்புகளின் விலைக்கு இணையாக எல்ஈடி விளக்குகளின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரச் சேமிப்பு

மின்சாரச் சேமிப்பு

இந்தியாவில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால், மின்சார உற்பத்தி மற்றும் அதன் செலவினத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

பிளமென்ட் பல்பு எனப்படும் சிஎப்எல் பல்புகள் மூலம் இந்தியாவில் மின்சாரச் சேமிப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் எல்ஈடி பல்புகளின் பயன்பாட்டினால் அதிகளவிலான மின்சாரச் சேமிப்பை உருவாக முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரம்

தற்போது சந்தையில் சிஎப்எல் விளக்குளின் விலை 130 - 215 ரூபாய் வரையில் உள்ளது. இதேவேளையில் மின்சாரம் அதிகம் சேமிக்கும் எல்ஈடி விளக்குகளின் விலை 160 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய விலை வித்தியாசத்தின் காரணமாக மட்டுமே எல்ஈடி விளக்குகளின் விற்பனை மந்தமாக உள்ளது, இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு 5 கோடி எல்ஈடி விளக்குகளைக் கொள்முதல் செய்யும் திட்டத்தை அறிவிக்க உள்ளது.

கொள்முதல்
 

கொள்முதல்

எல்ஈடி விளக்குகளின் உற்பத்தி முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுவதால் இதன் உற்பத்தி கட்டணம் குறைய உள்ளது.

மேலும் மத்திய அரசின் கொள்முதல் திட்டங்களின் மூலம் இதன் விலை அளவுகள் 20 ரூபாய் வரை குறைய உள்ளது,

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

இந்நிலையில் இந்தியாவில் உள்ள மின் விளக்கு உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது சிஎப்எல் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்து எல்ஈடி விளக்குகளின் உற்பத்தியை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை தலைவர் புனீத் தவான் தெரிவித்தார்.

கணிப்புகள்

கணிப்புகள்

மத்திய அரசின் இத்திட்டங்களின் மூலம் அடுத்த 6 மாதத்தில் 7 வாட் விளக்குகள் 120 ரூபாய், 9 வாட் விளக்குள் 140 ரூபாய், 12 வாட் விளக்குகள் 170 ரூபாய் என எல்ஈடி விளக்குகளின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் வருடத்திற்கு 600 வெப்பவெளியீட்டு விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது, இதன் விலை குறைவாக உள்ளதால் கிராமப்புறங்களில் அதன் விற்பனை அதிகளவில் உள்ளது. 700, 800 மில்லியனாக இருந்த Incandescent bulbகளின் விற்பனை எல்ஈடி தாக்கத்தால் 400 மில்லியனாகக் குறைந்ததில்லை.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் வெப்பவெளியீட்டு விளக்குகளின் விற்பனை 400 மில்லியனாகக் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LED bulbs may get cheaper by Rs 20 with government ordering 5 crore bulbs in 10 days

India's lighting industry is undergoing another shakeup as prices of energy-efficient light-emitting diode (LED) bulbs have dipped to the level of compact fluorescent lamps (CFL) and are likely to fall further with the biggest ever LED lamp purchase tender expected from the government in 10 days.
Story first published: Monday, November 30, 2015, 13:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X