சென்னை வெள்ளத்தில் உடைமைகளைப் பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மக்கள் தங்களின் தேவைக்காக வீடுகள், அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என வாங்கிக் குவித்தாலும், அதனை முறையாகப் பாதுகாக்கும் பணியைச் செய்யத் தவறுகிறார்கள். குறிப்பாகக் கார், பைக், வீடு போன்ற விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாக்க இன்சூரன்ஸ் செய்வதை மறந்தும் தவிர்த்து விடுகிறார்கள். அப்படி இன்சூரன்ஸ் எடுத்தாலும் அதற்கான தவணை தொகையைச் சரியான முறையிலும், சரியான நேரத்திலும் செலுத்தவதில்லை.

 

பொருட்களை வாங்குவதற்குப் பல லட்சங்கள் செலவு செய்யும் நாம் அதனைப் பாதுகாக்க சில ஆயிரங்களைச் செலவு செய்ய மறந்து விடுகிறோம்.

குறிப்பாகச் சென்னை மழை வெள்ளம் போன்ற எதிர்பாராத இயற்கை சீற்றங்களில் இருந்தும் நம்மையும், நம்முடைய உடைமைகளைப் பாதுகாப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். சென்னை முழுவதும் மழை நீர் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய புரிதல் மற்றும் அதன் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானது.

சென்னை வெள்ளத்தில் உடைமைகளைப் பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்கள்..!

இந்தியாவில் அளிக்கப்படும் சில இன்சூரன்ஸ் திட்டங்களில் நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள உதவி செய்கிறது. மேலும் சில திட்டங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் பாதுகாக்கிறது. எனவே வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் நாம் பல்வேறு காரணிகளைக் கவனிக்க வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு வீட்டுக் காப்பீட்டு திட்டங்களும் வீட்டில் உள்ள பொருட்களின் மீது காப்பீட்டு அளிப்பதில்லை. இதனைப் பெற நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும், குறிப்பாக வீட்டுக் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் முன் நிறுவன அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேள்விகளைக் கேட்டுத் தெளிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் வீட்டில் உள்ள ஆடம்பர பொருட்களுக்குத் தனியாகக் காப்பீட்டை பெறவும் வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி நெருப்பு, பூகம்பம், புயல், வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களுக்குக் காப்பீட்டுச் சேவை அளிக்கும் சில நிறுவனங்களையும் அதன் திட்டங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

 
சென்னை வெள்ளத்தில் உடைமைகளைப் பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்கள்..!

ஐசிஐசிஐ லோம்பார்டு ஹோம் இன்சூரன்ஸ்

இத்திட்டத்தில் உங்கள் வீட்டிற்கும், வீட்டில் உள்ள பொருட்களுக்கும் இன்சூரன்ஸ் அளிக்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் தீ விபத்து, திருட்டுக் கூடுதலாக, தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

மேலே குறிப்பிட்ட விபத்துகளில், வீட்டில் உள்ள ஆடைகள், சமையல் அறை சமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னீசர், நகைகள், ஓவியங்கள் போன்ற ஏதேனும் பாதிப்படைந்தால் அதற்கும் இத்திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.

இத்திட்டத்தில் போர், அணு விபத்து, கட்டிடங்களை இடித்தல் மற்றும் வெட்ட வெளியில் இருக்கும் பொருட்கள் உதாரணமாக வேலிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்குக் காப்பீடு அளிப்பதில்லை.

ஹெச்டிஎப்சி ஏர்கோ ஹோம் இன்சூரன்ஸ்

இத்திட்டத்தில் தீ விபத்து, மின்னல் தாக்குதல், வெடி குண்டு விபத்து மற்றும் வெடிப்பு, புயல், சூறாவளி, புயல், புயல் காற்று, வெள்ளம் மற்றும் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், எரிமலை விபத்து மற்றும் பிற இயற்கை சீற்றங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஹெச்டிஎப்சி ஏர்கோ நிறுவனம் காப்பீடு சேவை அளிக்கிறது.

ஆனால் இத்திட்டத்தின் கீழ் தீங்குதரும் சேதம், வன்முறையும் வேலைநிறுத்தம், பயங்கரவாத, கொள்ளை மற்றும் திருட்டு போன்றவற்றுக்கு நீங்கள் இழப்பீடு தொகை பெறக் காவல் துறையினரால் அளிக்கப்பட்ட எப்ஐஆர் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை வெள்ளத்தில் உடைமைகளைப் பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்கள்..!

டாடா ஏஐஜி ஸ்டான்ர்டு இன்சூரன்ஸ்

தீ விபத்து, மின்னல் தாக்குதல், வெடி குண்டு விபத்து மற்றும் வெடிப்பு, புயல், சூறாவளி, புயல், புயல் காற்று, வெள்ளம் மற்றும் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், எரிமலை விபத்து மற்றும் பிற இயற்கை சீற்றங்கள், தீங்குதரும் சேதம், வன்முறையும் வேலைநிறுத்தம், பயங்கரவாத, கொள்ளை மற்றும் திருட்டு போன்றவற்றில் ஏற்படும் சேதங்களுக்குக் காப்பிடு அளிக்கிறது.

பார்தி ஏஎக்ஸ்ஏ ஸ்டான்ர்டு இன்சூரன்ஸ்

இத்திட்டத்தின் கீழ் தீ, மின்னல், கலவரம், வேலைநிறுத்தம் மற்றும் தீங்கிழைக்கும் சேதம், வெடி குண்டு விபத்துகளில் ஏற்பட்டுச் சேதங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் அளிக்கிறது.

போர் மற்றும் நாட்டுக் கைப்பற்றுதலில் போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் சேதங்களுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குவதில்லை என்பதை நீங்கள் கவணிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does Your Home Insurance Cover Natural Calamities Like Floods And Tsunami?

Individuals take so much pain in building their dream home and decorating with expensive items, but fail to take insurance for the same.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X